சுரமஞ்சரியார் இலம்பகம் |
1135 |
|
|
காப்புடை வளநகர் காளை எய்தினான் - சுரமஞ்சரியின் காவலையுடைய வளமனையைச் சீவகன் அடைந்தான்.
|
(வி - ம்.) இவனை அறியாதபடி மறைத்தலின் முகபடாம் என்றார்.
|
யாப்பு - கட்டு. யாழ்மிடறு - யாழை ஒத்த மிடறு, தூப்புடை - தூய இடம்; என்றது தூய நெஞ்சம் என்றவாறு முற்றிழை : அன்மொழித் தொகை. இச்செய்யுளை யடுத்துச் சிலு பிரதிகளில் கீழ்வரும் செய்யுள் காணப்படுகின்றது. இதற்கு நச். உரை காணப்படவில்லை.
|
நற்றொடி மகளிரு நகர மைந்தரும் |
|
எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே |
|
பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன் |
|
பற்றிய தண்டொடு பைய மெல்லவே. |
|
என்பதாம்.
|
( 17 ) |
வேறு
|
|
(இ - ள்.) தண்டு வலியாக நனி தாழ்ந்து தளர்ந்து ஏங்கி - தன்கையிற் கொண்ட ஊன்றுகோலே பற்றுக்கோடாக மிகவும் தாழ்ந்து தளர்ந்து இளைத்து நின்று; கடைகாவலர்கள் கண்டு கழற - வாயிற் காவலர்கள் பார்த்து வினவ; முகம் நோக்கி - அவர்கள் முகத்தைப் பார்த்து; பண்டை இளங்கால் பாலடிசில் உவப்பன் - முற்காலத்தில் இளம்பருவத்தில் பாற்சோற்றை விரும்புவேன்; இந்நாள் கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான் - (ஆனால்) இம் முதுமையிலே என்னைக் கண்டு விருப்புற்றவர் கொடுப்பவற்றை விரும்புவேன் என்றான்.
|
(வி - ம்.) இவன் கூறியதன் உட்கோள் : இளம்பருவத்திலே பாற்சோறு ஒன்றையே விரும்புவேன்; இப்பருவத்தில் யான் கண்டு விரும்பப்பட்ட மகளிர் தருவன யாவற்றையும் காதலிப்பேன் என்பதாம்.
|
( 18 ) |
|
(இ - ள்.) அவர் கையின் தொழுதார் - (இதுகேட்ட) அவர்கள் கையால் தொழுதவராய்; கழிய மூப்பின் செவிகேளார் -
|