பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1136 

மிகவும் முதுமையாலே செவிகேளார்; மையலவர்போல மனம் பிறந்த வகை சொன்னார் - பித்தரைப்போல மனத்தில் தோன்றிய வகையே கூறினார் என்றெண்ணி; பசிக்கு இரங்கி - பசியுடை மைக்கு மனமிரங்கி; பைய நடக்க என்று விடுத்தார் - மெல்ல நடந்து செல்க என்று உள்ளே செல்ல விட்டார்; தொய்யில் முலையவர்கள் கடை - தொய்யில் எழுதிய முலையவர்கள் காக்கும் வாயிலிலே; தோன்றல் நனிபுக்கான் - சீவகன் விரைந்து சென்றான்.

   (வி - ம்.) தொழுதார் : வினையாலணையும் பெயர். கழிய - மிகமையலவர் - பித்தர். மனத்திற் றோன்றியவகையே என்க. கடை - வாயில். தோன்றல் : சீவகன்.

( 19 )
2014 கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்ப
வோதமணி மாலையொடு பூண்பிறழ வோடி
யேதமிது போமினென வென்னுமுரை யீயா
னூதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான்.

   (இ - ள்.) கோதையொடு சூழல தாழ்ந்து - கோதையுங் குழலுந் தாழ; ஞிமிறு பொங்கி ஆர்ப்ப - வண்டுகள் பொங்கி முரல; ஓதமணி மாலையொடு பூண்பிறழ் - கடலிற் பிறந்த முத்து மாலையுடன் மற்ற அணிகள் பிறழ; ஓடி - ஓடிவந்து; இது ஏதம் பேர்மின் என - இங்கே நீர் வருவது குற்றம், பேர்மின் என்ன : என்னும் உரை ஈயான் - சிறிதும் மறுமொழி கூறானாய் : ஊதஉகு தன்மையினொடு ஒல்கி உறநின்றான் - ஊதப் பறக்குந் தன்மையுடன் நுடங்கி வந்து நெருங்கி நின்றான்.

   (வி - ம்.) தாழ்ந்து - தாழ : எச்சத்திரிபு.

   ஞிமிறு - வண்டு. ஓதமணிமாலை - முத்துமாலை. என்னும் - சிறிதும். 'ஊதவுகு தன்மையினொடு' என்னு மிதனோடு ”ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை” என வரும் கம்பநாடர் மொழி நினையற்பாலது; (மீட்சிப். 249)

( 20 )
2015 கச்சுவிசித் தியாத்தகதிர் முலையர்மணி யயில்வா
ணச்சுநுனை யம்புசிலை நடுங்கவுட னேந்தி
யச்சமுறுத் தமதுபுளித் தாங்குத்தம தீஞ்சொல்
வெச்சென்றிடச் சொல்லிவிரி கோதையவர் சூழ்ந்தார்.

   (இ - ள்.) கக்சு விசித்து யாத்த கதிர்முலையர் - கச்சினால் இறுகக் கட்டிய ஒளிதரும் முலையினராய்; விரி கோதையவர் - மலர்ந்த மாலையணிந்த அம் மங்கையர்; மணி அயில் வாள் - அழகிய கூரிய வாளையும்; நச்சு நுனை அம்பு - நச்சு முனையுடைய அம்புடன்; சிலை - வில்லையும்; உடன் நடுங்க ஏந்தி - ஒன்று