பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1137 

சேர இவன் நடுங்குவானென எண்ணி ஏந்தி; அச்சம் உறுத்து - அச்சுறுத்தி; அமுது புளித்தாங்கு - அமுது புளித்தாற்போல; தம தீசொல் வெச்சென்றிடச் சொல்லி - தம்முடைய இனிய சொல் வெவ்விதாகக் கூறி; சூழ்ந்தார் - இவனை வளைந்தனர்.

   (வி - ம்.) முலையர் என்றது, காவன்மகளிரை, அயில் - வேல். நஞ்சு தோய்த்த நுனையையுடைய அம்பென்க. சிலை - வில். இயல்பாக அமுதை ஒத்து இனிக்கும் தம்முடைய சொல்லை மாற்றி என்க. வெச்சென்றிட வெவ்விதாக.

( 21 )
2016 பாவமிது நோவவுரை யன்மின் முதுபார்ப்பார்
சாவர்தொடி னேகடிது கண்டவகை வண்ண
மோவியர்தம் பாவையினொ டொப்பரிய நங்கை
யேவல்வகை கண்டறிது மென்றுசிலர் சொன்னார்.

   (இ - ள்.) முதுபார்ப்பார் நோவ உரையன்மின் இது பாவம் - இவர் முதிய பார்ப்பாராகையால் வருந்த மொழியாதீர், இவ்வாறு மொழிவது பாவம்; தொடினே கடிது சாவர் - தொட்டாற் கடிதே இறப்பர்; ஓவியர் தம் பாவையினொடு வண்ணம் ஒப்பரிய நங்கை - ஓவியரெழுதிய பாவையோடு கூட ஒப்பரிய நங்கைக்கு; கண்ட வகை - கண்ட வகையைக் கூறி; ஏவல் வகை கண்டு அறிதும் என்று - அவளது ஏவல் வகையைக் கண்டு பின்பு இவரை நீக்குவதை அறிவோம் என்று; சிலர் சொன்னார் - அவர்களிற் சிலர் கூறினார்.

   (வி - ம்.) முதுபார்ப்பார் நோவவுரையன்மின் என மாறுக. முதுபார்ப்பார் என்ற இத பாவம் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. நங்கை : சுரமஞ்சரி. அறிதும் தன்மைப்பன்மை வினைமுற்று.

( 22 )
2017 கையவளை மையகுழ லையரிய வாட்க
ணையுமிடை வெய்யமுலை நங்கையொரு பார்ப்பா
னுய்வதில னூழின்முது மூப்பினொடும் வந்தான்
செய்வதுரை நொய்தினெனச் சேறுமெழு கென்றாள்.

   (இ - ள்.) கையவளை - கையிடத்தனவாகிய வளையினையும்; மைய குழல் - கரிய குழலையும்; ஐ அரிய வாள்கண் - வியப்பூட்டும் செவ்வரியோடிய வாளனைய கண்களையும்; நையும் இடை - வருந்தும் இடையினையும்; வெய்ய முலை நங்கை! - விருப்பூட்டும் முலையினையுமுடைய நங்கையே!; ஒரு பார்ப்பான் ஊழின் முதுமூப்பினொடும் வந்தான் - ஓரந்தணன் முறையானே முதிர்ந்த மூப்போடு வந்தான்; உய்வதிலன் - இறந்துபடுவான் போலும்!; நொய்தின் செய்வது உரைஎன - விரைவில் (அவனிறப்பதற்கு முன்னே) யாங்கள் செய்வது என் எனக் கூறு என; சேறும்