சுரமஞ்சரியார் இலம்பகம் |
1138 |
|
|
எழுக என்றாள் - (அவளும்) யாம் அவனிடம் செல்வோம், நீர் முன்னே செல்க என்றாள்.
|
(வி - ம்.) ஊழி முதுமூப்பாயின் காலமாக்குக.
|
கைய - கையிடத்தனவாகிய. மைய - கருமையுடைய, ஐ - வியப்பு. அரி - கோடு. நங்கை : சுரமஞ்சரி; விளி நொய்தின் - விரைவின். சேறும் : தன்மைப்பன்மை வினைமுற்று.
|
( 23 ) |
2018 |
மாலைபல தாழ்ந்துமதுப் பிலிற்றிமணங் கமழுங் | |
கோலவகிற் றேய்வைகொழுஞ் சாந்தமுலை மெழுகிப் | |
பாலைமணி யாழ்மழலை பசும்பொனிலத் திழிவாள் | |
சோலைவரை மேலிழியுந் தோகைமயி லொத்தாள். | |
|
(இ - ள்.) கொழுஞ்சாந்தம் முலை - நல்ல சந்தனத்தை முலையிலே அப்பிய, பாலை மணியாழ் மழலை - பாலையாழ் போலும் மழலையை உடையாள்; கோல அகில் தேய்வை மெழுகி - அகிற்குழம்பாலே மெழுகப்பட்டு; மாலை பல தாழ்ந்து மதுப்பிலிற்றி - பல மாலைகள் நாற்றித் தேன்துளித்து; மணம் கமழும் பசும்பொன் நிலத்து இழிவாள் - மணம் வீசும் பசிய பொன்மாடத்தினின்றும் இழிகின்றவள்; சோலைவரை மேலிழியும் தோகை மயில் ஒத்தாள் - சோலையையுடைய மலையினின்றும் இழியும் தோகையையுடைய மயில்போன்றாள்.
|
(வி - ம்.) காவிடத்திற் கன்னிமாட மாதலின், சோலைவரை என்றார்.
|
இழிவாள் : வினையாலணையும் பெயர்; சுரமஞ்சரி. வரை - மாடத்திற்கும், தோகைமயில் - சுரமஞ்சரிக்கும் உவமை.
|
( 24 ) |
2019 |
சீறடிய கிண்கிணிசி லம்பொடுசி லம்ப | |
வேறுபடு மேகலைகண் மெல்லெனமி ழற்றச் | |
சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட | |
நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள். | |
|
(இ - ள்.) சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப - சிற்றடிகளில் அணிந்த கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க; வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்ற - வேறுபட்ட மேகலையில் மணிகள் மெல்லென்று இசைப்ப; சேறுபடு கோதைமிசை வண்டு திசைபாட (மகரந்தம் தேனொடு கலந்ததனால்) சேறு பட்ட கோதையின்மேலிருந்த வண்டுகள் தேனை நுகரமுடியாமல் திசைதொறும் எழுந்து பாட; நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள் - மணமுடைய மலர்க்கொம்பு நடை கற்பதைப்போல வந்தாள்.
|