பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1139 

   (வி - ம்.) துகிலுள்ளும் புறம்பும் கிடத்தலின், வேறுபடு மேகலை என்றார்.

   மிழற்ற - ஒலிப்ப, திசைதொறும் எழுந்து பாட என்க. மலர்க்கொம்பர் - சுரமஞ்சரிக்குவமை.

( 25 )
 

   (இ - ள்.) வந்த வரவு என்னை என - நீ வந்த வருகையாது கருதி என்று சுரமஞ்சரி வினவ; வாள்கண் மடவாய்! கேள் - வாளனைய கண்களையுடைய மடந்தையே! கேள்; சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட - உள்ளத்தை வருத்துகின்ற அழகிய நீரையுடைய குமரியிலே ஆட (அழகிய தன்மையையுடைய குமரியாகிய நின்னுடன் ஆட) என்று கூற; அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள் - 'அதனாலாகிய பயன் யாது? கூறுக' என்றாட்கு; முந்தி நலிகின்ற முதுமூப்பு ஒழியும் என்றான் - முதனமையாக என்னை வருத்தும் இம் முதிய மூப்பு (தான் வருங்காலத்து வாராமல் முன்னே வந்து வருத்தும் இம் முதிய மூப்பு) நீங்கும் என்றான்.

   (வி - ம்.) இவன் 'நின்னுடன் கூடவந்தேன் : கூடுதலின் முன் இம் முதிய மூப்புவேடம் நீங்கும்' என்று கருதக் கூறினான். அவளோ, 'குமரியாட வந்தானென்றும், அந்நீரிலே ஆடினால் முதுமைநோய் நீங்கும்' என்றும் கூறினானாகக் கருதினாள்.

   திருநீர்க்குமரி - அழகிய நீரையுடைய குமரியாறு; அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னை என இரு பொருளும் காண்க. அந்தில் : அசை.

( 26 )
 

   (இ - ள்.) நறவு இரிய நாறுகுழலாள் பெரிது நக்கு - பூமணங்கள் எல்லாம் தோற்க மணக்குங் கூந்தலாள் மிகுதியாக நகைத்து; பிறரும் பெறுநர் உளரோ? பேணி மொழிக என்ன - 'குமரியாடி இளமை பெறுவார் நின்னையொழியப் பிறரும் உளரோ? ஆராய்ந்து கூறுக' என்று வினவ; துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல்என்றற்கு - இம் மூப்புப் போம்துறையைக் கண்டு அடைந்து தொழுது ஆடுவார் இலர் (நீ