சுரமஞ்சரியார் இலம்பகம் |
1144 |
|
|
2030 |
மட்டுவிரி கோதைமது வார்குழலி னாடன் | |
பட்டுநிணர் கட்டில்பரி வின்றியுறை கென்றா | |
ளிட்டவணை மேலினிது மெல்லெனவ சைந்தான் | |
கட்டழல்செய் காமக்கட லைக்கடைய லுற்றான். | |
|
(இ - ள்.) மட்டுவிரி கோதை மதுவார் குழலினாள் - மகரந்தம் மிகுந்த கோதையையுடைய தேன்வாருங் கூந்தலாள்; தன் பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உறைக என்றாள் - தன்னுடைய பட்டுக்கச்சால் பிணிக்கப்பட்ட கட்டிலிலே வருத்தமின்றித் தங்குக என்றாள்; கட்டழல் செய் காமக்கடலைக் கடையலுற்றான் - கொடிய நெருப்பைப் போன்ற அலைவின்றி நின்ற காமக்கடலைக் கடையத் தொடங்கினவன்; இட்ட அணைமேல் இனிது மெல் என அசைந்தான் - தனக்கிட்ட பள்ளியின்மேல் மெல் என இனிதாகக் களைப்பாறினான்.
|
(வி - ம்.) நிணர்கட்டில் : வினைத்தொகை. இது நிண என்றே வரும் : ஈண்டு, அண, அணர் என்று வந்தாற்போன்று ரகரமெய் பெற்று வந்தது. நிணத்தல் - பின்னுதல். அசைந்தான் : வினயாலணையும் பெயர்.
|
( 36 ) |
2031 |
காலையொடு தாழ்ந்துகதிர் பட்டதுக லங்கி | |
மாலையொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றி | |
வேலனைய கண்ணியர்தம் வீழ்துணைவர் திண்டோள் | |
கோலமுலை யாலெழுதக் கூடியதை யன்றே. | |
|
(இ - ள்.) கதிர் காலையொடு தாழ்ந்து கலங்கிப்பட்டது - ஞாயிறு பகற்பொழுதுடன் மேற்றிசையிலே வீழ்ந்து கலங்கிப் பட்டது; மாலையொடு மதி வந்து தோன்ற - பிறகு, மாலைக் காலத்தோடே திங்கள் வந்து தோன்றலின்; வேலனைய கண்ணியர் மகிழ்தோன்றி - வேல் போன்ற கண்ணினர் களிப்புத் தோன்றி; தம்வீழ் துணைவர் திண்தோள் - தாம் விரும்பிய கணவரின் திண்ணிய தோளை; கோலமுலையால் எழுதக் கூடியது - அழகிய முலைகளால் எழுதுமாறு இராப்பொழுது வந்து சேர்ந்தது.
|
(வி - ம்.) கூடியதை : ஐ : அசை.
|
காலை - பகல் என்னும் பொருட்டாய் நின்றது. கதிர் காலையொடு தாழ்ந்துபட்டது என மாறுக. கதிர் - ஞாயிறு. மகிழ் - மகிழ்ச்சி. அன்று. ஏ : அசைகள்.
|
( 37 ) |
2032 |
ஏந்துமலர்ச் சேக்கையகில் வளர்த்தவிடு புகையு | |
மாய்ந்தமலர்க் கோதையமிர் துயிர்க்குநறும் புகையுங் | |
கூந்தலகிற் புகையுந்துகிற் கொழுமெனறும் புகையும் | |
வாய்ந்தவரை மழையினுயர் மாடத்தெழுந் தனவே. | |
|