சுரமஞ்சரியார் இலம்பகம் |
1145 |
|
|
(இ - ள்.) மலர் ஏந்து சேக்கை - மலர் பொருந்திய அணையிலே; அகில் வளர்த்த இடுபுகையும் - அகில் வளர்த்த புகையும்; ஆய்ந்த மலர்க்கோதை அமிர்து உயிர்க்கும் நறும் புகையும் - அழகிய மலர்மாலைக்கு ஊட்டிய இனிமையுடைய நல்ல அகிற் புகையும்; கூந்தல் அகிற் புகையும் - கூந்தற்குப் புகைத்த அகிற் புகையும்; துகில் கொழுமென் நறும்புகையும் - ஆடைக்கு ஊட்டிக் கொழுவிய மெல்லிய அகிற்புகையும்; வாய்ந்த வரை மழையின் - பொருந்திய மலைமீது தவழும் முகிலென; உயர் மாடத்து எழுந்தன - உயர்ந்த மாடத்தே எழுந்தன.
|
(வி - ம்.) மலரேந்து சேக்கை என்க. சேக்கை - படுக்கை. அமிர்து - இனிமை. வரை - மலை. மழை - முகில்.
|
( 38 ) |
2033 |
ஆசிலடு பாலமிர்தஞ் சிறியவயின் றம்பூங் | |
காசில்படி மாலைகல நொய்யமதி கவற்குந் | |
தூசுநறுஞ் சாந்தினிய தோடிவைக டாங்கி | |
மாசின்மட வார்கண்மணி வீணைநரம் புளர்ந்தார். | |
|
(இ - ள்.) ஆசு இல் அடு பால் அமிர்தம் சிறிய அயின்று - குற்றமற்ற காய்ச்சிய பாற்சோற்றைச் சிறிதளவு உண்டு; காசு இல் அம்கடி பூமாலை நொய்ய கலம் - குற்றம் அற்ற அழகிய மலர் மாலையும் திண்மையற்ற அணிகலனும்; மதிகவற்கும் தூசு - அறிவைக் கவலச் செய்யும் ஆடை; நறுஞ்சாந்து - நல்ல சந்தனம்; இனிய தோடு - அழகிய தோடு; இவைகள் தாங்கி - இவற்றை அணிந்து; மாசுஇல் மடவார்கள் - குற்றமற்ற பெண்கள்; மணி வீணை நரம்பு உளர்ந்தார் - அழகிய வீணையின் நரம்பைத் தடவி வாசித்தனர்.
|
(வி - ம்.) கூதிராதலின் பாலடிசில் கூறினார். 'உண்டிசுருங்குதல் பெண்டிர்க் கழகு' ஆதலின், 'சிறிது அயின்று' என்றார்.
|
புணர்ச்சித் தொழில் கருதி நொய்ய கலம் அணிந்தனர் என்பது கருத்து.
|
( 39 ) |
2034 |
பூஞ்சதங்கை மாலைபுகழ்க் குஞ்சிப்பொரு வில்லார் | |
வீங்குதிர டோளுந்தட மார்பும்விரை மெழுகித் | |
தீங்கரும்பு மென்றனைய வின்பவளச் செவ்வாய்த் | |
தேங்கொளமிர் தார்ந்துசெழுந் தார்குழையச் சோ்ந்தார். | |
|
(இ - ள்.) பூஞ்சதங்கை மாலை புகழ்க்குஞ்சிப் பொரு இல்லார் - ஒருபுற மாலையினையும் குஞ்சினையுமுடைய ஒப்பற்ற ஆடவர் தமது; வீங்கு திரள் தோளும் தடமார்பும் விரைமெழுகி - பருத்த திரண்ட தோளும் பெரிய மார்பும் பொருந்த மணக் கலவையை மெழுகி; தீ கரும்பு மென்ற அனைய இன்பவளச்
|