சுரமஞ்சரியார் இலம்பகம் |
1146 |
|
|
செவ்வாய்த் தேன்கொள் அமிர்து ஆர்ந்து - இனிய கரும்பை மென்றாலனைய இனிய பவளமனைய செவ்வாயின் இனிமை கொண்ட அமிர்தத்தைப் பருகி, செழுந்தார் குழையச் சேர்ந்தார் - வளவிய தார் வாடும்படி அணைந்தனர்.
|
(வி - ம்.) பூஞ்சதங்கை மாலை என்பதனை ஒருபுறமாலை என்பர் நச்சினார்க்கினியர். குஞ்சி - ஆடவர் தலைமயிர் - விரை - நறுமணச் சாந்து. கரும்பு மென்றனைய அமிர்து, வாய் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக.
|
( 40 ) |
2035 |
பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான் | |
முன்னியதன் மன்றலது முந்துறமு டிப்பான் | |
மன்னுமொரு கீதமது ரம்படமு ரன்றாற் | |
கின்னமிர்த மாகவிளை யாருமது கேட்டார். | |
|
(இ - ள்.) பொன் அறையுள் இன் அமளிப் பூவணையின் மேலான் - பொன்னாலான அறையிலே இனிய படுக்கையில் மலரணையின்மேலிருந்த சீவகன்; முன்னிய தன் மன்றலது முந்துஉற முடிப்பான் - தான் நினைத்திருந்த தன் மணத்தினை விரைந்து முடிக்க வேண்டி; மன்னும் ஒரு கீதம் மதுரம்பட முரன்றாற்கு - நிலைபெற்றதொரு இசையை இனிமையுறப் பாடினாற்கு; இளையாரும் இன்னமிர்தம் ஆக அதுகேட்டார் - இள மங்கையரும் இனிய அமிர்தமாக அதனைக் கேட்டனர்.
|
(வி - ம்.) நான்காம் உருபிற்கு இவர் கேட்டது கொடைப் பொருட்டாம்.
|
மேலான் : வினையாலணையும் பெயர்; சீவகன். முன்னிய - கருதிய மன்றல் - திருமணம், ஈண்டு யாழோர் மணம். மன்றலது என்புழி, அது பகுதிப்பொருளது. கீதம் - இசை.
|
( 41 ) |
வேறு
|
2036 |
மன்ம தன்ம ணிக்கு ரன்ம | |
ருட்டு மென்று மால்கொள்வா | |
ரின்ன தின்றி யக்க ரின்னி | |
யக்க வந்த தென்றுதம் | |
பின்னு முன்னு நோக்கு வார் | |
பேது சால வெய்துவார் | |
கன்னி தன்ம னத்தி ழைத்த | |
காளை நாமம் வாழ்த்துவார். | |
|
(இ - ள்.) மன்மதன் மணிக்குரல் மருட்டும் என்று மால் கொள்ளார் - காமனது அழகிய குரலே என்றும், அக் குரலை
|