சுரமஞ்சரியார் இலம்பகம் |
1147 |
|
|
இது மயக்கும் என்றும் மயக்கங்கொள்வார்; இன்னது அன்று இயக்கரின் இயக்க வந்தது என்று தம் பின்னும் முன்னும் நோக்குவார் - இத் தன்மைத்தன்று, இயக்கரால் இசைக்கப்படுதலின் வந்தது என்று தம் பின்னும் முன்னும் நோக்குவார்; பேதுசால எய்துவார் - பேதைமையை மிகவுங் கொள்வார்; கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார் - சுரமஞ்சரியின் உள்ளத்திலே இழைக்கப்பெற்ற சீவகனே இவ்வாறு பாட வல்லான் என்று அவன் பெயரை வாழ்த்துவார்.
|
(வி - ம்.) மணிக்குரல் - அழகிய குரல், மால் - மயக்கம். சால - மிகவும். கன்னி என்றது சுரமஞ்சரியை. காளை : சீவகன்.
|
( 42 ) |
2037 |
கொம்பி னொத்தொ துங்கி யுங்கு | |
ழங்கன் மாலை தாங்கியு | |
மம்பி னொத்த கண்ணி னார | |
டிக்க லம்ம ரற்றவுந் | |
நம்பி தந்த கீதமேந யந்து | |
காண வோடினார் | |
வெம்பு வேட்கை வேனி லானின் | |
வேற லானு மாயினான். | |
|
(இ - ள்.) கொம்பின் ஒத்து ஒதுங்கியும் - மலர்க்கொத்தென அசைந்தும்; குழங்கல் மாலை தாங்கியும் . மணமுறும் மாலைகளைத் தாங்கியும்; அம்பின் ஒத்த கண்ணினார் - கணையனைய கண்களையுடையார்; அடிக்கலம் அரற்றவும் - அடியில் அணிந்த சிலம்பு முதலியன இடைவருந்துமென ஒலிக்கவும்; நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார்; - சீவகன் தந்த இசையை விரும்பி அவ்விசையுடையானைக் காண ஓடினார்; வெம்பு வேட்கை வேனிலான் வேறலானும் ஆயினான் - மனம் வெம்பும் வேட்கையை விளைத்த சீவகன் இசையினாலும் கட்புலனாகாமையாலும் காமனினும் வேறல்லாதவன் ஆயினான் (காமனே ஆயினான்).
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர், 'காண' என்பதற்குக் 'கேட்க' என்று பொருளுரைத்துக், 'கேள்வியும் உணரப்படுதலின் காட்சியே ஆம்' என்றார். 'நாடினார்' என்றும் பாடம்.
|
( 43 ) |
2038 |
தாம மாலை வார்கு ழற்ற டங்க ணார்க்கி டங்கழி | |
காம னன்ன காளை தன்க ருத்தொ டொத்த தாகலான் | |
மாம லர்த்தெ ரியலான்ம ணிமிடற்றி டைக்கிடந்த | |
சாம கீத மற்று மொன்று சாமி நன்கு பாடினான். | |
|