சுரமஞ்சரியார் இலம்பகம் |
1150 |
|
|
ஒலிக்கவும் வந்து நீவிர் முடிப்ப தாகிய வேலை என்ன? யான் மிகவும் முதிர்ந்தேன் என்று சீவகன் கூற; வடிக்கணாள் நக்கு நாணி - மாவடுவனைய கண்ணாள் நகைத்து நாணி, தோழியை மறைந்து - தோழிக்குப் பின்னே மறைந்து நின்று; மின்னுக் கொடிக் குழாத்திடை - மின்னுக்கொடித் திரளிடையே; ஓர்கோலம் குளிர் மணிக் கொம்பின் நின்றாள் - ஓர் அழகிய குளிர்ந்த மணிக் கொடிபோல நின்றாள்.
|
(வி - ம்.) அடிக்கலம் - சிலம்பு முதலியன, கலை-மேகலை பெரிது - மிகமிக, அரிவை : விளி. முடிப்பது : இடக்கர்; தோழியை ஏதுவாகக் கொண்டு மறைந்து என்க. மின்னுக்குழாம், தோழியர் குழாத்திற்கும் மணிக்கொம்பு, சுரமஞ்சரிக்கும் உவமைகள்.
|
( 47 ) |
2042 |
இளையவற் காணின் மன்னோ | |
வென்செய்வீர் நீவி ரென்ன | |
விளைமதுக் கண்ணி மைந்தர் | |
விளிகெனத் தோழி கூற | |
முலையெயிற் றிவளை யாரு | |
மொழிந்தன ரில்லை யென்றோ | |
வுளைவது பிறிது முண்டோ | |
வொண்டொடி மாதர்க் கென்றான். | |
|
(இ - ள்.) நீவிர் இளையவன் காணின் மன்னோ என் செய்வீர் என்ன - நீர் என்னையன்றி இளைஞனைக் கண்டால் மிகவும் என்ன செய்வீர் என்று சீவகன் வினவ; விளைமதுக் கண்ணி மைந்தர் விளிக எனத் தோழி கூற - மிகுந்த தேனையுடைய கண்ணியை அணிந்த மைந்தர் பெயரும் இவ்விடத்துக் கெடுக என்று தோழி கூற; முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ - கூரிய பற்களையுடைய இவளை யாரும் பெண் பேசினார் இல்லை என்ற காரணத்தாலோ?; ஒண்தொடி மாதர்க்கு உளைவது பிறிதும் உண்டோ? என்றான் - ஒளிரும் வளையணிந்த இவட்கு வருந்தும் பான்மையாக அவர் செய்தது வேறும் உண்டோ? என்று சீவகன் வினவினான்.
|
(வி - ம்.) இளையவன் என்றது பெரிதுமூத்த என்னையன்றி இளையான் ஒருவனை என்பதுபட நின்றது. மன் : ஒழியிசை. ஓ : அசை.
|
( 48 ) |
2043 |
வாய்ந்தவிம் மாதர் சுண்ணஞ் | |
சீவகன் பழித்த பின்றைக் | |
காய்ந்தன ளென்று கூறக் | |
காளைமற் றிவட்குத் தீயான் | |
|