பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1153 

   (இ - ள்.) ஆடு அமைத் தோளினீர் - அசையும் மூங்கிலனைய தோளையுடையீர்!; பாவை பொற்பே பற்றி எமக்கு நல்கின் - இப் பாவையாள் தனது தோற்றப் பொலிவு தொடங்கி ஒழிந்தவற்றையும் எமக்குக் கொடுத்தால்; பாடுதும் - பாடக்கடவேம்; அஃது ஒட்டுமேல் கேண்மின் என்ன - அதனைத் தர உடம்படுவாளாயின் கேளுங்கள் என்று சீவகனுரைக்க; நங்கைகாள்! - பெண்களே!; பேயை நாடிக் காண்பார் யார்? - பொன்னல்லாத பேயைத் தேடிக் காண்பார் யார்?; இவ் ஆண்மகன் உரைப்பது ஆடுவது ஒன்றும் அன்று - (மேலும்) இந்த ஆண் மகன் கூறும் பொன்னாலாகிய பேய் இவ்வுலகில் நிகழ்வதொன்றும் அன்று; இதுவும் ஆமே என்றார் - (ஆகையால்) இதுவும் நாம் ஒப்புவதற்காகும் என்றார்.

   (வி - ம்.) உலகில் இல்லாததற்கு உடம்படலாம். அஃது ஒருவனாற் காட்ட முடியாதாகலின். 'ஒருபொருளிருசொற் பிரிவில் வரையார்' (தொல் எச்ச. 94) என்னுஞ் சூத்திரத்து, வரையார் என்றதனால், 'பொற்பே' என்னும் ஏகாரவீற்றுப் பெயர் வேறும் ஒரு பொருள் தந்து நிற்றலின், பேய் என்று யகரவீறுமாய் நின்றது. இதற்கு யகர ஒற்று விகாரத்தால் தொக்கதாம். 'அருங்கழி காதம் அகலும் என்றூழென்றலந்து கண்ணீர் - வருங்கழி காதல் வனசங்கள்' (சிற். 190) என்ற இடத்து, 'அலர்ந்து' என்பது, 'அலந்து' என்று விகாரப்பட்டு நின்றாற் போல.

( 52 )
2047 பட்டுலாய்க் கிடந்த செம்பொன்
  பவளமோ டிமைக்கு மல்கு
லொட்டினா ளதனை யோரோ
  துலம்பொரு தோளி னானும்
பட்டவா ணுதலி னாய்க்குப்
  பாடுவல் காமன் றந்த
தொட்டிமை யுடைய வீணைச்
  செவிச்சுமை யமிர்த மென்றான்.

   (இ - ள்.) பட்டு உலாய்க் கிடந்த செம்பொன் பவளமோடு இமைக்கும் அல்குல் - பட்டுச் சூழ்ந்து கிடந்த செம்பொன்னும் பவளமும் ஒளிரும் அல்குலையுடையாள்; அதனை ஓராது ஒட்டினாள் - அவன் கருதியதனை அறியாமல் ஒப்பினாள்; உலம்பொரு தோளினானும் - கற்றூணைப் பொருந் தோளையுடையானும்; காமன் தந்த தொட்டிமை உடைய வீணைச் செவிச் சுவை அமிர்தம் - காமன் பாடின - ஒற்றுமையுடைய குரல் வீணையாலாகிய, செவிக்கு இனிமைதரும் அமிர்தத்தை; பட்ட வாள் நுதலினாய்க்குப் பாடுவல் என்றான் - பட்டம் அணிந்த ஒள்ளிய நெற்றியை உடைய நினக்குப் பாடுவேன் என்றான்.