பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1154 

   (வி - ம்.) இனி, பொன்னாலே பேயைப் பண்ணிக் கொடுப்போம் என்று ஒட்டினாள் என்பாரும் உளர். காமனைக் கூறினான். இவள் வரம் வேண்டப் போதலைக் கருதி.

( 53 )
2048 வயிரவில் லுமிலும் பைம்பூண்
  வனமுலை மகளிர் தம்மு
ளுயிர்பெற வெழுதப் பட்ட
  வோலியப் பாவை யொப்பாள்
செயிரில்வாண் முகத்தை நோக்கித்
  தேன்பொதிந் தமுத மூறப்
பயிரிலா நரம்பிற் கீதம்
  பாடிய தொடங்கி னானே.

   (இ - ள்.) வயிர வில் உமிழும் பைம்பூண் வனமுலை மகளிர் தம்முள் - வயிரவொளியை வீசும் பைம்பூண் அணிந்த அழகிய முலைகளையுடைய மகளிரிலே; உயிர்பெற எழுதப்பட்ட ஓவியப் பாவை ஒப்பாள் - உயிருண்டாக எழுதப்பட்ட ஓவியப்பாவை போன்ற சுரமஞ்சரியின்; செயிரில் வாள் முகத்தை நோக்கி - குற்றம் அற்ற முகத்தைப் பார்த்து; தேன்பொதிந்து அமுதம் ஊற - இனிமை நிறைந்து அமுதம் பெருக; நரம்பின் பயிரிலாக் கீதம் பாடிய தொடங்கினான் - நரம்புடன் கூடி மறைகின்ற அருவருப்பில்லாத இசையைப் பாடுதற்குத் தொடங்கினான்.

   (வி - ம்.) நரம்பிற் பயிர் இல்லாத கீதம் - நரம்பிசையோடு கூடி அதனுள் மறைதலாலே உண்டாகும் அருவருப்பு இல்லாத இசை. பயிர் என்றது ஈண்டு அருவருப்பு என்னும் குற்றத்தின் மேனின்றது. அமுதம் - இனிமை. 'நரம்போடே பாடினான் என்பாருமுளர்' என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.

( 54 )

வேறு

2049 தொடித்தோள் வளைநெகிழத் தொய்யின் முலைமேல்
வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங் காலும்
வார்புயலுங் காலும் வளைநெகிழு நந்திறத்த
தார்வமுறு நெஞ்ச மழூங்குவிக்கு மாலை.

   (இ - ள்.) தொடித்தோள் வளைநெகிழ - வட்டமான தோள்வளை நெகிழாநிற்க; வடிக்கேழ் மலர் நெடுங்கண் - மாவடு போன்ற நிறம் பொருந்திய மலர்ந்த நீண்ட கண்கண்; தொய்யில் முலைமேல் வார்புயலும் காலும் - தொய்யில் எழுதிய முலைமேல் வீழும் நீரைச் சொரியும்; வார்புயலும் காலும் வளைநெகிழும் நம் திறத்தது - அங்ஙனம் காலுதற்கும் நெகிழ்தற்குங் காரண