பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1156 

மாகிய நம்மிடத்து உளதாகிய; ஆர்வம் உறும் நெஞ்சம் மாலை அழுங்குவிக்கும் - ஆவல்கொண்ட நெஞ்சினை மாலை வருத்தும்.

   (வி - ம்.) இது முதல் மூன்று செய்யுளும் சீவகன் பாடிய இசைப் பாடல்கள் என்க. தோள் தொடிவளை என மாறுக. தொடி - வட்டம். தொய்யில் எழுதப்பட்ட முலை என்க. வடி - மாவடு, கேழ் - நிறம். மலர் நெடுங்கண் : வீனைத்தொகை.

( 55 )
 

   (இ - ள்.) ஐதுஏந்து அகல் அல்குல்! - மெல்லிய காஞ்சியை ஏந்திய அல்குலையுடையாய்!; ஆவித்து அழல் உயிராக் கைசோர்ந்து அணல் ஊன்றி - கொட்டாவி கொண்டு நெருப்பென மூச்செறிந்து கை சோர்வுற்றுக் கன்னத்திலே ஊன்றுதலாலே; கண்ணீர் கவுள் அலைப்ப - கண்ணீர் கன்னத்தை வருத்தி வீழும்; கண்ணீர் கவுள் அலைப்பக் கையற்று யாம் இனைய - அங்ஙனம் அலைத்தலின், யாம் கையற்று அதன்மேலே வருந்தும்படி; புண் ஈரும் வேலின் மாலை புகுந்தது - புண்ணைப் பிளக்கும் வேலைப் போல மாலை புகுந்தது.

   (வி - ம்.) 'வீழும்' என வருவிக்க.

   ஐது - மென்மையுடையது; என்றது ஈண்டுக் காஞ்சி என்னும் ஓரணிகலனை - அல்குல்; விளி, ஆவித்து - கொட்டாவி விட்டு, கையற்று - செயலற்று. இனைய - வருந்தும்படி. வேலின் - வேல்போன்று.

( 56 )
 

   (இ - ள்.) அவிழ்ந்து ஏந்து பூங்கோதை! - மலர்ந்து விளங்கும் பூங்கோதாய்!; ஆகத்து அலர்ந்த முகிழ்ந்து ஏந்து இள முலைமேல் பொன்பசலை பூப்ப - மார்பிலே தோன்றி அரும்பி நிமிர்ந்த இளமுலைமேல் பொன் போன்ற பசலை உண்டாகத் தோன்றும்; பொன்பசலை பூப்பப் பொருகயல் கண்முத்து அரும்ப - அங்ஙனம் பொன் பசலையுண்டாகவும் காதொடு பொருங் கயற்கண்கள் முத்தனைய நீரை அரும்பவும்; அன்பு உருகும் நெஞ்சம் மாலை அழுங்குவிக்கும் - அன்பினாலே உருகும் நெஞ்சை மாலை வந்து வருத்தும்.