| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1157 |
|
|
|
(இ - ள்.) மடல் அணி பெண்ணை ஈன்ற மணிமருள் குரும்பை மான - மடலை அணிந்த பனை பெற்ற நீலமணியை நிறத்தால் மருட்டும் குரும்பை போல; உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும் - (ஆடவரின்) உடலிற் பொருந்திய உயிர் வருந்தத் தோன்றி வளரும் முலையாளும்; அடல் அணி தோழிமாரும் - பிறரை வருத்தும் அழகினையுடைய தோழியரும்; ஆர்வத்தில் கழும - வரம் வேண்ட எண்ணும் ஆவலிலே திரள; இப்பால் - இனி; கடல் அணி திலகம்போலக் கதிர்திரை முளைத்தது - கடல் அணிந்த பொட்டுப்போல ஞாயிறு கடல்மிசை தோன்றியது.
|
|
(வி - ம்.) வடிவால் குரும்பையைப் போன்ற முலை, நிறத்தால் மணி மருள் முலை என இயைப்பர் நச்சினார்க்கினியர். 'மணிமருள் குரும்பைமான' என்றே செய்யுள் உள்ளது மற்றும் பனங்குரும்பையின் நிறம், நீலமணி போன்றது; முலைக்கண்கள் மட்டுமே நீலமணியை மருட்டுவன. முலைக்கண்களையே கூறினாரெனின், விதந்து கூறுவார் என்க.
|
( 59 ) |
| 2054 |
பொன்னியன் மணியுந் தாருங் | |
கண்ணியும் புனைந்து செம்பொன் | |
மின்னியற் பட்டஞ் சோ்த்தி | |
யானெய்பால் வெறுப்ப வூட்டி | |
மன்னியற் பாண்டில் பண்ணி | |
மடந்தைகோல் கொள்ள வைய | |
மின்னியற் பாவை யேற்பத் | |
தோழியோ டேறி னாளே. | |
|
|
(இ - ள்.) மன்இயல் பாண்டில் - நிலைபெற்ற செலவினையுடைய எருத்தை; பொன் இயல் மணியும் தாரும் கண்ணியும் புனைந்து - பொன்னால் ஆன மணி, தார், கண்ணி ஆகியவற்றைப் புனைந்து; மின்இயல் பட்டம் சேர்த்தி - மின்னால் இயன்ற பட்டத்தைச் சேர்த்து; ஆன்நெய் பால் வெறுப்ப ஊட்டி - ஆவின் நெய்யையும் பாலையும் தெவிட்ட ஊட்டி; பண்ணி - பண்டியிற் பூட்டி; மடந்தை கோல்கொள்ள - ஒரு மடந்தை எருத்தைச் செலுத்துங் கோலைக் கையில் கொள்ள; இன்னியற் பாவை தோழியோடு ஏற்ப வையம் ஏறினாள் - இனிய இயலையுடைய பாவை தன் தோழியுடன் (ஆடவரைக் காணாமற்போகும் போக்கிற்கு) இயைய வண்டியில் ஏறினாள்.
|
|
(வி - ம்.) தார் கண்ணி என்பன மாலைவகைகள், வெறுப்ப - மிக. பாண்டில் பண்ணி - எருத்தினைப் பூட்டி. ஒரு மடந்தை கோல் கொள்ள என்றவாறு. ஆடவரை வெறுத்தவளாகலின் மடந்தை கோல் கொளல் வேண்டிற்று.
|
( 60 ) |