சுரமஞ்சரியார் இலம்பகம் |
1158 |
|
|
2055 |
ஆடவ ரிரிய வேகி | |
யஞ்சொல்லார் சூழக் காமன் | |
மாடத்து ளிழிந்து மற்றவ் | |
வள்ளலை மறைய வைத்துச் | |
சூடமை மாலை சாந்தம் | |
விளக்கொடு தூப மேந்திச் | |
சேடியர் தொழுது நிற்பத் | |
திருமகள் பரவு மன்றே. | |
|
(இ - ள்.) ஆடவர் இரிய அம்சொலார் சூழ ஏகி - (அரசன் ஆணையால்) ஆடவர் விலக, அழகிய மொழியாரான பெண்கள் சூழச் சென்று; மாடத்துள் இழிந்து - காமன் கோட்டத்திலே இறங்கி; அவ் வள்ளலை மறைய வைத்து - சீவகனை மறைய வைத்து; சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி - சூடுதற்கான மாலையும் சாந்தமும். விளக்கும் தூபமும் எடுத்துக் கொண்டு; சேடியர் தொழுது நிற்ப - பணிமகளிர் காமனைத் தொழுதவாறு நிற்க; திருமகள் பரவும் - திருமகள் அனையாள் பரவுகின்றாள்.
|
(வி - ம்.) ஆடவர் அரசன் ஆணையால் விலக என்க. காமன் மாடம் - காமன் கோயில், (கோட்டம்). வள்ளல்; சீவகன், சேடியர் - பணிமகளிர். திருமகள் : உவமவாகுபெயர்; சுரமஞ்சரி. அன்று, ஏ : அசைகள்.
|
( 61 ) |
2056 |
பொன்னிலஞ் சென்னி புல்ல | |
விடமுழந் தாளை யூன்றி | |
மின்னவிர் மாலை மென்பூங் | |
குழல்வலத் தோளின் வீழக் | |
கன்னியங் கமுகின் கண்போற் | |
கலனணி யெருத்தங் கோட்டித் | |
தன்னிரு கையுங் கூப்பித் | |
தையலீ துரைக்கு மன்றே. | |
|
(இ - ள்.) இட முழந்தாளை ஊன்றி - இட முழந்தாளை ஊன்றி; மின் அவிர் மாலை மென் பூங்குழல் வலத்தோளில் வீழ - ஒளிவீசும் மாலையும் மென்மையான மலர்க்குழலும் வலத் தோளிலே விழ; கன்னிஅம் கமுகின் கண்போல் கலன் அணி எருத்தம் கோட்டி - ஈனாத இளங்கமுகின் கண்போலக் கலனை அணிந்த கழுத்தை வலத்தே சாய்த்து; பொன்நிலம் சென்னி புல்ல - பொன் தரையிலே முடிபொருந்த (வணங்கியெழுந்து);
|