| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1161 |
|
|
| 2060 |
கலந்தொளி கான்று நின்று | |
கதிர்விடு திருவில் வீச | |
நலங்கனிந் துருகி நின்றா | |
ணாமவேற் காமர் கண்ணாள். | |
|
|
(இ - ள்.) நாம வேல் காமர் கண்ணாள் - அச்சந்தரும் வேல் போன்ற விருப்பூட்டுங் கண்ணாள்; அலங்கலும் குழலும் தாழ - மாலையுங் குழலும் தாழவும்; அரு மணிக்குழை ஓர் காதில் கலந்து ஒளி கான்று நின்று கதிர் விடு திருவில் வீச - அரிய மணிக்குழை ஒரு காதிற் கலக்குமாறு ஒளியை உமிழ்ந்து நின்று ஒளியுடைய வான வில்லென வீச; இலங்கு பொன் ஓலை மின்ன - விளங்கும் பொன்னோலை ஒளிவிட; இன்முகம் சிறிது கோட்டி - இனிய முகத்தைச் சிறிதே சாய்த்து; நலம் கனிந்து உருகி நின்றாள் - அன்பு முற்றி நெஞ்சுருகி நின்றாள்.
|
|
(வி - ம்.) கோட்டி - சாய்த்து, ஒளிகான்று - ஒளிவீசி, நலம் - அன்பு. நாமவேல் - அச்சமுண்டாக்கும் வேல். வேற்கண், காமர்கண் எனத் தனித் தனி கூட்டுக.
|
( 66 ) |
| 2061 |
எரிமணிக் கலாபத் திட்ட | |
விந்திர நீல மென்னு | |
மொருமணி யுந்தி நேரே | |
யொருகதி ருமிழ்வ தேபோ | |
லருமணிப் பூணி னாட | |
னவ்வயி றணிந்த கோலத் | |
திருமயி ரொழுக்கம் வந்தென் | |
றிண்ணிறை கவர்ந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) எரிமணிக் கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும் ஒருமணி - விளங்கும் மணிமேகலையில் அழுத்திய, இந்திர நீலம் என்கிற ஒப்பிலாத மணி; உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல் - உந்திக்கு நேராக ஒரு கதிரை உமிழுந் தன்மை போல; அருமணிப் பூணினாள் தன் அவ்வயிறு அணிந்த - அரிய மணிக்கலனுடையாளின் வயிற்றை அழகுசெய்த; கோலத் திரு மயிர் ஒழுக்கம் - அழகிய மயிரொழுங்கு; வந்து என் திண்நிறை கவர்ந்தது - வந்து என் திண்ணிய நிறையைக் கவர்ந்தது.
|
|
(வி - ம்.) மயிரொழுங் கொன்றே திண்ணிறை கவர்ந்ததாயின் ஒழிந்தன என் செய்யா என்று சீவகன் தன்னுளெண்ணினான். வயிற்றினை அழகு செய்யும் மயிரொழுங்கு மேகலையில் அழுத்திய இந்திர நீலம் என்ற மணி ஒளிவிடுவதுபோல இருந்தது என்பது கருத்து இது தற்குறிப்பேற்றவணி.
|
( 67 ) |