| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1162 |
|
|
| 2062 |
தேறினேன் றெய்வ மென்றே | |
தீண்டிலே னாயி னுய்யேன் | |
சீறடி பரவ வந்தே | |
னருளெனத் தொழுது சோ்ந்து | |
நாறிருங் குழலி னாளை | |
நாகணை விடையிற் புல்லிக் | |
கோறொடுத் தநங்க னெய்யக் | |
குழைந்துதார் திவண்ட தன்றே. | |
|
|
(இ - ள்.) தெய்வம் என்றே தேறினேன் - யான் நின்னைத் தெய்வம் என்றே தெளிந்தேன்; சீறடி பரவ வந்தேன் - நின் சிற்றடியை வழிபட வந்தேன்; தீண்டிலேன் ஆயின் உய்யேன் - இனி நின்னைத் தீண்டே னெனின் வாழ்கிலேன்; அருள் எனத் தொழுது சேர்ந்து - அருள்வாய் என்று வணங்கிச் சேர்ந்து; கோல் தொடுத்து அநங்கண் எய்ய - அம்பெடுத்துக் காமன் செலுத்த; நாறு இருங் குழலினாளை நாகு அணை விடையின் புல்லி - மணமுடைய கருங் குழலாளை நாகைத் தழுவும் விடையெனத் தழுவ; தார் குழைந்து திவண்டது - இவன் அணிந்த தார் குழைந்து வாடியது.
|
|
(வி - ம்.) 'நின்னடியைப் பரவ வந்தேன்; வந்த யான் நின்னைத் தெய்வம் என்றே கருதிப் பிறகு மானிடமென்றே தெளிந்தேன்' என்று, கொண்டு கூட்டி விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 68 ) |
| 2063 |
கலைபுறஞ் சூழ்ந்த வல்குற் கார்மயிற் சாய லாளு | |
மலைபுறங் கண்ட மார்பின் வாங்குவிற் றடக்கை யானு | |
மிலைபுறங் கண்ட கண்ணி யின்றமி ழியற்கை யின்ப | |
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார். | |
|
|
(இ - ள்.) கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும் - கலையைப் புறத்தே சூழக் கொண்ட அல்குலையுடைய காருக்குரிய மயிலனைய சாயலாளும்; இலை புறங்கண்ட கண்ணி மலை புறங் கண்ட மார்பின் வாங்குவில் தடக்கையானும் - பச்சிலையைக் கொண்ட கண்ணியையும், மலைதோற்ற மார்பினையும், தடக்கையையும் உடைய சீவகனும்; ஆகிய தமக்கு நிகர் இலாத நீரார் - தமக்கு உவமையில்லாத தன்மையார்; இன்தமிழ் இயற்கை இன்பம் - இனிய தமிழிற் கூறிய இயற்கைப் புணர்ச்சியாகிய இன்பத்தை; நிலைபெற நெறியின் துய்த்தார் - நிலை பெறும்படி முறையின் நுகர்ந்தார்.
|
|
(வி - ம்.) இது, சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படுதலின், உலகியல் வழக்கான காந்தருவமாம்.
|
( 69 ) |