| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1163 |
|
|
| 2064 |
குங்குமங் குயின்ற கொம்மைக் | |
குவிமுலை குளிர்ப்பத் தைவந் | |
தங்கலுழ் மேனி யல்குற் | |
காசுடன் றிருத்தி யம்பொற் | |
பொங்குபூஞ் சிலம்பிற் போர்த்த | |
பூந்துக ளவித்து மாதர் | |
கொங்கலர் கோதை சூட்டிக் | |
குழனலந் திருத்தி னானே. | |
|
|
(இ - ள்.) குங்குமம் குயின்ற கொம்மைக் குவிமுலை குளிர்ப்பத் தைவந்து - (வேட்கை தீர நுகராமையிற் பிறந்த வெப்பம் நீங்க) சுரமஞ்சரியின் குங்குமம் பூசிய பருத்த குவிந்த முலைகள் குளிரத் தடவி; அம் கலுழ் மேனி அல்குல் காசு உடன் திருத்தி - அழகு வழியும் மேனியில் உள்ள அணியையும் அல்குலிலுள்ள மணிமேகலையின் காசுகளையும் சேரத் திருத்தி; பொங்கு அம் பொன் பூஞ்சிலம்பில் போர்த்த பூந்துகள் அவித்து - ஒலிக்கும் அழகிய பொற் சிலம்பிலே போர்த்த மகரந்தத் தூளைத் துடைத்து; மாதர் கொங்கு அலர் கோதை சூட்டி - அவளுடைய தேனலரும் மாலையை அணிந்து; சூழல் நலம் திருத்தினான் - குழலையும் நலமுறத் திருத்தினான்.
|
|
(வி - ம்.) அவ்விடம் மலர் பரப்பிக் கிடத்தலின் பூந்துகள் கூறினார்.
|
( 70 ) |
வேறு
|
| 2065 |
வானார்கமழ் மதுவுஞ் சாந்து மேந்தி | |
மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந் | |
தேனார்பூங் கோதாய் நினக்குக் காமன் | |
சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தான் | |
றானாரப் பண்ணித் தடறு நீக்கித் | |
தண்குருதி தோய்த்துத் தகைமை சான்ற | |
வூனார்ந்த வோரிணை யம்புந் தந்தா | |
னென்னை யுளனாக வேண்டி னானே. | |
|
|
(இ - ள்.) வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி - வானில் நிறைந்து கமழும் மதுவையும் சாந்தையும் ஏந்தி; மதுத் துளித்து - அம்மதுவைத் துளித்தலின்; மூசும் வண்டும் சுரும்பும் தேன் ஆர் பூங்கோதாய்! - மொய்க்கின்ற வண்டுகளும் சுரும்புகளும் தேனினமும் நுகரும் மலர் மாலையாய்!; நினக்குக் காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலித் தந்தான் - நினக்குக்
|