| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1164 |
|
|
|
காமன் தன் கையில் வில்லையும் சேம வில்லையும் நேரே வளைத்துத் தந்தான்; தான்ஆரப் பண்ணித் தடறு நீக்கி - (அதுவுமன்றி) அவன் தான் தாழ்வறப் பண்ணி உறையை நீக்கி; தண் குருதி தோய்த்து - தண்ணிய குருதியைத் தோய்த்து; தகைமை சான்ற - அழகு நிறைந்த; ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் - ஊன் பொருந்திய ஒப்பற்ற இரண்டு அம்புகளையும் கொடுத்தான் ; என்னை உளன் ஆக வேண்டினானே! - (அவற்றிற் கிலக்காக) என்னை உயிருடன் இருக்க வேண்டியிருந்தானே!
|
|
(வி - ம்.) இவ்வாறு காமன் செயலை இகழ்ந்து கூறினான். ஏகாரம் : தேற்றம். நோக்கிய மேனி வாடுதலின், 'ஊனார்ந்த' என்றார்.
|
|
இச்செய்யுளோடு, ”அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப், படை வழங்குவதோர் பண்புண் டாகலின்; உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில், இருகரும் புருவ மாக வீக்க” என வரும் (2-42-5) சிலப்பதிகாரப் பகுதியும், அதற்கு அடியார்க்கு நல்லார் உரைத்த ”சேம வில்லையும் கூட்டி” என வரும் விளக்கமும் ஒப்புநோக்கற் பாலன.
|
( 71 ) |
| 2066 |
கண்ணக்க கண்ணிக் கமழ்பூங் குழற்க | |
ரும்போ் தீஞ்சொ லாள்கதிர் முலைகளின் | |
வண்ணக்கு வானு நிலனுமெல் லாம்விலை | |
யேமழை மின்னு நுசுப்பி னாளைப் | |
பெண்ணுக் கணியாக வேண்டி மேலைப் | |
பெரியோர் பெருமான் படைத்தா னென்று | |
புண்ணக்க வேலான் புகழ நாணிப் | |
பூநோக்கிப் பூக்கொசிந்த கொம்பொத் தாளே. | |
|
|
(இ - ள்.) கள் நக்க கண்ணி - தேனைச் சிந்தும் பூமாலை; கமழ்பூங் குழல் - மணக்கும் பூங்குழலும்; கரும்பு ஏர் தீஞ்சொலாள் - கரும்பனைய இனிய மொழியும் உடையாளின்; கதிர் முலைகளின் வண்ணக்கு - ஒளிரும் முலைகளின் அழகுக்கு; வானும் நிலனும் எல்லாம் விலையே - விண்ணும் மண்ணும் யாவும் விலையாகுமா?; மழை மின்னும் நுகப்பினாளை - மழையில் மின்னுப்போலும் இடையினாளை; பெண்ணுக்கு அணியாக வேண்டி - பெண்களுக்கு அணியாக விரும்பி ; மேலைப் பெரியோர் பெருமான் படைத்தான் என்று - மேனாளிற் பெரியோர் பெருமானாகிய பிரமன் படைத்தான் என்று; புண் நக்க வேலான் புகழ நாணி - புண் செய்யும் வேலான் புகழ வெள்கி; பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாள் - குவளை மலர் போலும் பார்வையினாள் மலர்க்கு வாடிய கொம்பு போன்றாள்.
|
|
(வி - ம்.) இது முன்னிலைப் படர்க்கை.
|