பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1166 

   (வி - ம்.) வில் - ஒளி. ஆழி - மோதிரம். நங்கை : விளி, சிலம்பும் கிண்கிணியும் மிழற்ற என்க. காசு - மணி. ஆயம் - தோழியர் கூட்டம் பாவை : சுரமஞ்சரி.

( 74 )
2069 பருமணிப் படங்கொ ணாகப் பையெனப் பரந்த வல்கு
லெரிமணிப் பூணி னானுக் கின்னல மொழிய வேகித்
திருமணிச் சிவிகை யேறிச் செம்பொனீண் மாடம் புக்காள்
விரிமணி விளங்கு மாலை வெம்முலை வேற்க ணாளே.

   (இ - ள்.) பருமணிப் படம்கொள் நாகப் பையெனப் பரந்த அல்குல் - பெரிய மணியைப் படத்திற் கொண்ட அரவின் படமெனப் பரவிய அல்குலையும்; விரிமணி விளங்கும் மாலை - மிகுதியான மணி ஒளிரும் மாலையினையும்; வெம்முலை வேற்கணாள் - வெம்முலையையும் உடைய வேற்கண்ணாள்; எரிமணிப் பூணினானுக்கு இன்நலம் ஒழிய ஏகி - விளங்கும் மணிக்கலனுடையான்பால் இனிய அன்பு நிற்கச் சென்று : திரு மணிச் சிவிகை ஏறி - அழகிய மாணிக்கச் சிவிகையிலே அமர்ந்து; செம்பொன் நீள் மாடம்புக்காள் - பொன்னாலியன்ற பெரிய மனையிலே புகுந்தாள்.

   (வி - ம்.) பருமணி - பரிய மணி பை - படம், அல்குலையும் மாலையையும் முலையையும் உடைய கண்ணாள் எனக் கூட்டுக.

( 75 )
2070 திருவிற்றான் மாரி கற்பான்
  றுவலைநாட் செய்வ தேபோ
லுருவிற்றாய்த் துளிக்குந் தேற
  லோங்குதார் மார்பன் றோழர்
பொருவிற்றா நம்பி காம
  திலகனென் றிருந்த போழ்திற்
செருவிற்றாழ் நுதலி னாள்கண்
  மணத்திறஞ் செப்பு கின்றார்.

   (இ - ள்.) திருவில் தான் மாரி கற்பான் துவலை நாள் செய்வதே போல் - இந்திரவில் தான் மழை பெய்யக் கற்பதற்கு நீர்த்துளியை நாட்கொள்வது போல்; உருவிற்றாய் - வடிவுடையதாய்; துளிக்கும் தேறல் ஓங்கு தார் மார்பன் தோழர் - துளிக்கும் தேனையுடைய மேம்பட்ட மார்பையுடைய சீவகனின் தோழர்கள்; பொருவிற்று ஆம் நம்பி - யாம் உவமிக்கத் தகுதியாம் நம்பி; காம திலகன் என்று இருந்தபோதில் - காம திலகன் என ஒரு பெயர் கூறி இருந்த அளவிலே; செருவில் தாழ் நுதலினாள் கண் மணத் திறம் செப்புகின்றார் - போருக்குரிய வில்