பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1167 

உவமையில் தோற்கும் புருவத்தினாளிடம் மணத்திறத்தைக் கூறுகின்றார்.

   (வி - ம்.) திருவில் - வானவில். கற்பான் : வினையெச்சம். துவலை - துளி. உருவிற்றாய் - வடிவுடையதாய். பொருவிற்றா நம்பி - பொரு விற்று ஆம் நம்பி எனக் கண்ணழித்துக் கொள்க.

( 76 )
2071 கனைகடலமுதுந் தேனுங் கலந்துகொண் டெழுதப் பட்ட
புனைகொடி பூத்த தேபோற் பொறுக்கலா நுசுப்பிற் பாவை
நனைகுடைந் துண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும்
புனைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து விட்டார்.

   (இ - ள்.) கனை கடல் அமுதும் தேனும் கலந்து கொண்டு எழுதப்பட்ட - ஒலி கடலில் அமுதையும் தேனையும் ஒன்றாகக் கலந்துகொண்டு வரையப்பட்ட; புனை கொடி - ஒப்பனை செய்த கொடி; பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை - இரண்டு முகைகளைப் பூத்த தன்மை போல் உள்ள முலைகளைப் பொறாத இடையையுடைய பாவையாலாகிய; நனைகுடைந்து உண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும் - தேனைக் குடைந்து பருகித் தம் வயிற்றை நிறைத்து அழகிய நீலமணி போலும் வண்டுகள் பாடுகின்ற; புனைகடி மாலை மாதர் திறத்து - அணிந்த மணமுறும் மாலையையுடைய சுரமஞ்சரியின் சுற்றத்தாரிடம்; இது மொழிந்து விட்டார் - இம் மணத்தைச் சொல்லி விடுத்தனர்.

   (வி - ம்.) திறம் - சுற்றம்.

   ”எழுதப்பட்ட நனையையுடையதொரு கொடி; கொடி, அமுதையும் தேனையும் தன்னுள்ளே கலந்துகொண்டு இரண்டு முகையைப் பூத்த தன்மைபோலிருக்கின்ற முலைகளைப் பொறாத நுசுப்பினையுடைய பாவைபோலு மாதர், வண்டு குடைந்து உண்டு தன்வயிற்றை நிறைத்துப் பாடும் மாலையையுடைய மாதர் என்க” என்பர் நச்சினார்க்கினியர்.

( 77 )
2072 ஐயற்கென் றுரைத்த மாற்றங்
  கேட்டலு மலங்க னாய்கன்
வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல்
  விழுங்கலோ டுமிழ்த றேற்றான்
செய்வதெ னோற்றி லாதே
  னோற்றிலா டிறத்தி னென்று
மையல்கொண் டிருப்ப வப்பாற்
  குமரிதன் மதியிற் சூழ்ந்தாள்.

   (இ - ள்.) ஐயற்கு என்று உரைத்த மாற்றம் - சீவகற்கு இவளைத் தரவேண்டும் என்று கூறிய மொழியை; அலங்கல்