| நாமகள் இலம்பகம் |
117 |
|
| 212 |
ஆரறி விகழ்தல் செல்லா வாயிரஞ் செங்க ணானுங் |
| |
கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் |
| |
பேரறி வுடையை நீயும் பிணையனாட் கவலஞ் செய்யு |
| |
மோரறி வுடையை யென்றா னுருத்திர தத்த னென்பான். |
|
|
(இ - ள்.) ஆரறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங்கணானும் - பேரறிவை மற்றோர் இகழ்தல் இயலாத ஆயிரங் கண்ணனான இந்திரனும்; கூர்அறிவு உடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் - கூரிய அறிவுடைய பண்பினராம் அமைச்சர் சொல்லின் பொருளைக் குறிக்கொண்டு நடப்பான்; நீயும் பேரறிவு உடையை - இந்திரனைப்போல நீயும் பேரறிவு உடையாய்; பிணை அனாட்கு அவலம் செய்யும் ஓர் அறிவுடையை என்றான் உருத்திரதத்தன் என்பான் - எனினும் இப்போது பிணைபோன்ற விசயைக்குத் துன்பம் உண்டாக்கும் ஓரறிவு உடையை ஆனாய் என்று உருத்திரதத்தன் உரைத்தான்.
|
|
|
(வி - ம்.) அவலம் : அரசன் கொலை செய்யப்படல்.
|
|
|
[நிமித்தகன் கூறியவற்றை அரசன் கேளாமையின் உருத்திர தத்தன் இங்ஙனம் - உரைத்தான்.]
|
|
|
ஆர் அறிவு - நிரம்பிய அறிவு. கூர்அறிவு - கூர்த்த அறிவு. நீயும் என்புழி உம்மை சிறப்பு. பிணையனாள்- பெண்மான் போன்ற விசயை. ஓர் அறிவு என்றது காமமே கன்றிநின்ற இவ்வோரறிவே என்பதுபட நின்றது.
|
( 183 ) |
| 213 |
அளந்துதாங் கொண்டு காத்த வருந்தவ முடைய நீரார்க் |
| |
களந்தன போக மெல்லா மவரவர்க் கற்றை நாளே |
| |
யளந்தன வாழு நாளு மதுவெனக் குரைய லென்றான் |
| |
விளங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுட ரிமைக்கும் பூணான். |
|
|
(இ - ள்.) விளங்கு ஒளிமணிகள் வேய்ந்து விடுசுடர் இமைக்கும் பூணான் - ஒளிவீசும் மணிகள் பதித்து ஒளிவிடும் பூண்களையுடைய சச்சந்தன்; தாம் அளந்துகொண்டு காத்த அருந்தவம் உடையார்க்கு - தாம் அளவாகக்கொண்டு போற்றிய அரிய தவத்தினர்க்கு; அற்றைநாளே போகம் எல்லாம் அளந்தன - கருவில் அமைந்தபோதே நுகர்ச்சியெல்லாம் அளவிடப்பட்டுள்ளன ; அவரவர்க்கு வாழும் நாளும் அளந்தன - அவரவர்க்கு அப்போது வாழ்நாட்களும் அளவிடப்பட்டுள்ளன; அது எனக்கு உரையல் என்றான் - (ஆகவே) நிலையாமையைப் பற்றி நீ எனக்கு உரைத்தல் வேண்டா என்று கூறினான்.
|
|
|
(வி - ம்.) போகமும் என்னும் உம்மை கூறிற்றிலர், செஞ்சொலாய் முற்படக் கிடத்தலின். 'நிலம்திரு நீங்கும்' (204) என நிமித்திகன்
|
|