| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1170 |
|
|
| 2076 |
கெண்டையுஞ் சிலையுந் திங்க | |
ளிளமையுங் கிடந்து தேங்கொ | |
டொண்டையங் கனியு முத்துந் | |
தொழதக வணிந்து தூங்குங் | |
குண்டல முடைய திங்க | |
ளிதுவெனு முகத்தி தாதை | |
வண்புகழ்க் குபேர தத்தன் | |
கேட்டனன் மனைவி சொன்னாள். | |
|
|
(இ - ள்.) கெண்டையும் சிலையும் இளமைத் திங்களும் கிடந்து - கயல் மீனும் வில்லும் பிறைத்திங்களும் கிடந்து; தேன்கொள் தொண்டைஅம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து - இனிமை கொண்ட கொவ்வைக் கனியையும் முத்தையும் நன்கு மதிப்பு அணிந்து; தூங்கும் குண்டலம் உடைய திங்கள் இது எனும் - அசையுங் குண்டலத்தையுடைய முழுமதி இதுவென்கிற; முகத்தி தாதை கேட்டனன் - முகமுடைய சுரமஞ்சரியின் தந்தை என்னென்று கேட்டனன்; மனைவி சொன்னாள் - மனைவியாகிய சுமதி இதனைக் கூறினள்.
|
|
(வி - ம்.) இங்குக் கூறிய முழுமதி இல்பொருளுவமை.
|
|
கெண்டை கண்களுக்கும் சிலை புருவங்களுக்கும் பிறை நெற்றிக்கும் தொண்டைக்கனி உதடுகட்கும் முத்து பற்களுக்கும் உவமைகள். நற்றாய் தந்தைக்கு அறத்தொடு நின்றாள் என்க.
|
( 82 ) |
| 2077 |
செருவிளைத் தனலும் வேலோய் | |
சிறுமுதுக் குறைவி தானே | |
பெருவளைப் பிட்டுக் காத்த | |
கற்பிது போலு மையன் | |
கரிவிளைத் தாய்ந்த சுண்ணம் | |
வாட்டின னென்று கண்டாய் | |
திருவிளை தேம்பெய் மாரி | |
பாற்கடற் பெய்த தென்றாள். | |
|
|
(இ - ள்.) செருவிளைத்து அனலும் வேலோய்! - போரை விளைத்துக் கனலும் வேலுடையாய்; சிறுமுதுக் குறைவிதானே பெருவளைப் பிட்டுக் காத்த கற்பு இது - சிறுவயதிலே பேரறிவு பெற்ற சுரமஞ்சரிதானே பெரிய வேலியிட்டுக் காத்த கற்பாகிய இது; ஐயன் கரிவிளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று போலும் - சீவகன் சான்று காட்டி ஆராய்ந்த சுண்ணத்தைத் தீதெனக் காட்டினானென்று கருதிப்போலும்; என்று கண்டாய் -
|