| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1171 |
|
|
|
என்று அறிக; திருவிளை தேன்பெய் மாரி பாற்கடல் பெய்தது என்றாள் - மற்றும் இது செல்வம் விளையும் தேன்பெய்கின்ற மழை பாற்கடலிலே பெய்தது ஆயிற்று என்றாள்.
|
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர் இரண்டு செய்யுளையும் ஒன்றாக்கிக் குபேரதத்தன் கேட்டனன் என்பதை யிறுதியிற் சேர்ப்பர்.
|
|
வேலோய் என்றது குபேரதத்தனை. சிறுமுதுக்குறைவி - இளமையிலேயே பேரறிவு படைத்தவள். ஈண்டுச் சுரமஞ்சரி. வளைப்பு - காவல். கற்பு என்றது ஆடவரைக் காணேன் எனக் கொண்ட மனத்திட்பத்தை. கரி - சான்று. 'பாற்கடலில் தேன்மாரி பெய்ததுபோல' என்பதொரு பழமொழி.
|
( 83 ) |
| 2078 |
செருவிளைத் தனலும் வேலோய் | |
சிறுமுதுக் குறைவி தானே | |
பெருவளைப் பிட்டுக் காத்த | |
கற்பிது போலு மையன் | |
கரிவிளைத் தாய்ந்த சுண்ணம் | |
வாட்டின னென்று கண்டாய் | |
திருவிளை தேம்பெய் மாரி | |
பாற்கடற் பெய்த தென்றாள். | |
|
|
(இ - ள்.) நாய்கன் கேட்பது விரும்பி - குபேரதத்தன் அதனைக் கேட்பதிலே விருப்பங்காட்டி; கிளைக்கெலாம் உணர்த்தி - உறவினர்க்கெல்லாம் அறிவித்து; யார்க்கும் வேட்பன அடிசில் ஆடை விழுக்கலன் மாலை சாந்தம் கோள குறைவு இன்றி ஆக்கி - யாவருக்கும் விரும்பப்படுவனவாகிய உணவும் ஆடையும் சிறந்த பூணும் மாலையும் சாந்தமும் கொள்ளுதலிற் குறைவில்லாமற் செய்து; குழும் இயம் கறங்கி ஆர்ப்ப - கூடிய மணவியங்கள் எழுந்தொலிக்க; நாள் - நல்ல நாளிலே; கடிமாலையாற்கு - மணமுறு மாலையணிந்த சீவகனுக்கு; நங்கையை நல்கினான் - சுரமஞ்சரியைக் கொடுத்தான்.
|
|
(வி - ம்.) 'கேட்டலும்' என்றும் பாடம். இதுவே நல்ல பாடம்.
|
|
கேட்பது - கேட்கற்பாலது' நாய்கன்; குபேரதத்தன். யார்க்கும் கோள் குறைவின்றி ஆக்கி என்க. குழும் இயம் : வினைத்தொகை. நாள் - நன்னாளில். மாலையான் : சீவகன்.
|
( 84 ) |
| 2079 |
பரியகஞ் சிலம்பு பைம்பொற் | |
கிண்கிணி யார்ந்த பாதத் | |
தரிவைய ராடன் மிக்கா | |
ரருமணி வீணை வல்லா | |
ருரியநூற் றெண்மர் செம்பொ | |
னொன்றரைக் கோடி மூன்று | |
ரெரியழன் முன்னர் நோ்ந்தே | |
னென்மகட் கென்று சொன்னான். | |
|