பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1172 

   (இ - ள்.) பரியகம் சிலம்பு பைம்பொன் கிண்கிணி ஆர்ந்த பாதத்து அரிவையர் - காற்சரியும் சிலம்பும் கிண்கிணியும் பொருந்திய அடிகளையுடைய அரிவையர்; ஆடல்மிக்கார் அருமணி வீணைவல்லார் உரிய நூற்றெண்மர் - ஆடலிற் சிறந்தாரும் அரிய மணிகளிழைத்த யாழில் வல்லாருமாக உரியவராய் நூற்றெண்மரும்; ஒன்றரைக்கோடி செம்பொன் - ஒன்றரைக் கோடி பொன்னும்; மூன்று ஊர் - மூன்று ஊர்களையும்; என்மகட்கு எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என்று சொன்னான் - என் மகளுக்கு எரியும் தீயின்முன்னர்க் கொடுத்தேன் என்று கூறினான்.

   (வி - ம்.) பரியகம் - காற்சரி என்னுமோ ரணிகலம். ஆடன்மிக்காரும் வீணை வல்லாரும் ஆகிய அரிவையர்; பரியக முதலியவற்றையுடைய பாதத்தராகிய அரிவையர் எனத் தனித்தனி கூட்டுக.

( 85 )
2080 மாசறு மணியு முத்தும் வயிரமு மொளிரு மேனி
யாசறு செம்பொ னார்ந்த வலங்கலங் குன்ற னானுந்
தூசுறு பரவை யல்குற் றூமணிக் கொம்ப னாளுங்
காசறக் கலந்த வின்பக் கடலகத் தழுந்தி னாரே.

   (இ - ள்.) மாசு அறு மணியும் முத்தும் வயிரமும் ஒளிரும் மேனி - குற்றமில்லாத மணியும் முத்தும் வயிரமும் விளங்கும் மேனியில்; ஆசு அறு செம்பொன் ஆர்ந்த அலங்கல் அம்குன்று அனானும் - துரிசற்ற சிவந்த பொன்னாலாகிய மாலையணிந்த அழகிய குன்று போன்றவனும்; தூசு உறு பரவை அல்குல் தூமணிக்கொம்பு அனாளும் - ஆடை புனைந்த பரவிய அல்குலையுடைய தூய மணிக்கொடி போன்றவளும்; காசு அறக் கலந்த இன்பக் கடலகத்து அழுந்தினார் - தூயதாகக் கூடிய இன்பக் கடலிலே முழுகினார்.

   (வி - ம்.) இவ்வாசிரியர் காதலரைக் குன்றனானும் கொம்பனாளும் என்றே பற்பல இடங்களினும் கூறும் இயல்புடையராதலை உணர்க. காசு - குற்றம்.

( 86 )
2081 பொன்வரை பொருத யானைப்
  புணர்மருப் பனைய வாகித்
தென்வரைச் சாந்து மூழ்கித்
  திரள்வடஞ் சுமந்து வீங்கி
மின்வளர் மருங்குல் செற்ற
  வெம்முலை மணிக்கண் சேப்பத்
தொன்னலம் பருகித் தோன்ற
  றுறக்கம்புக் கவர்க ளொத்தான்.