| சுரமஞ்சரியார் இலம்பகம் | 
1176  | 
 | 
  | 
| 2086 | 
குண்டல மிலங்கக் கோதை |   | 
  கூந்தலோ டவிழ்ந்து சோர |   | 
வொண்டொடி யூடி நின்றா |   | 
  ளொளிமணிப் பூங்கொம் பொப்பாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணிபரந்து இமைப்ப நொந்து - நுண்ணிய ஆடை நெகிழ்ந்ததனால் அல்குலின் மேல் மேகலை மணி பரவி ஒளிர வருந்தி; கண்களை இடுகக் கோட்டி - கண்களைச் சுருக்கிச் சாய்த்து; காமத்தால் செயிர்த்து நோக்கி - காமத்தினாற் சினந்து பார்த்து; குண்டலம் இலங்க கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர - குண்டலம் விளங்கவும், கூந்தலுடன் மாலை அவிழ்ந்து சோரவும்; ஒளிமணிப் பூங்கொம்பு ஒப்பாள் - ஒளிவிடும் மணிக்கொடி போன்றாளாகிய; ஒண்தொடி ஊடி நின்றாள் - ஒள்ளிய வளையினாள் பிணங்கி நின்றாள். 
 | 
| 
    (வி - ம்.) ஒப்பிட்டுப் பார்த்தேன் என்று காரணத்துடன் கூறியும் தன்னினும் அவ்வுருவம் அழகுற இருப்பதாக எண்ணியே நோக்கினான் என்று ஊடினாள். அது மேற்செய்யுளில் வரும். 
 | 
( 92 ) | 
| 2087 | 
கிழவனாய்ப் பாடி வந்தென் |   | 
  கீழ்ச்சிறை யிருப்பக் கண்டே |   | 
னெழுதிய பாவை நோக்கி |   | 
  யிமையவித் திருப்பக் கண்டே |   | 
னொழிகவிக் காம மோரூ |   | 
  ரிரண்டஃக மாயிற் றென்றாங் |   | 
கழுதகண் ணீர்கண் மைந்த |   | 
  னாவிபோழ்ந் திட்ட வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கிழவனாய் என் சிறைக்கீழ் வந்து பாடி இருப்பக் கண்டேன் - கிழவனாய் என் காவலிடத்தே வந்து பாடி இருப்ப அதுகண்டேன்; எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்பக் கண்டேன் - சுவரில் எழுதிய பாவையைப் பார்த்து இமையாமல் இருக்கவும் பார்த்தேன்; ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று - ஓர் ஊரிலே இரண்டு முறைமை நிகழ்ந்தது (ஆதலால்); இக்காமம் ஒழிக என்று - ஈண்டு நிகழ்த்துகின்ற காமத்தை ஒழிக என்று; ஆங்கு அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட - அப்போது அவள் அழுத கண்ணீர்கள் சீவகன் உயிரை வருத்தின. 
 | 
| 
    (வி - ம்.) 'நீர்கள்' என்றதனை, 'என், பாராட்டைப்பாலோ சில' (கலி. 85) என்றாற்போலக் கொள்க. 
 |