பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1177 

   நச்சினார்க்கினியர் முற்செய்யுட்களிற் பளிக்குச் சுவரும் நிழலும் அமைத்துக் கொண்டதற்குத் தக, ஈண்டு, 'எழுதிய' என்பதற்கு 'ஒரு படத்திலே எழுத வேண்டி' என்று கூறுவர். இவ்வாறே தம் விடாப்பிடியைக் காட்டுவது அவர் வழக்கம்.

( 93 )
2088 அலங்கறா தவிழ வஞ்செஞ்
  சீறடி யணிந்த வம்பூஞ்
சிலம்பின்மேற் சென்னி சோ்த்திச்
  சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்ப ரன்றே
  பெரியவ ரென்று கூறி
யிலங்குவேற் கண்ணி யூட
  லிளையவ னீக்கி னானே.

   (இ - ள்.) இளையவன் - சீவகன்; இலங்குவேல் கண்ணி ஊடல் - விளங்கும் வேலனைய கண்ணியின் ஊடலை; சிறியவர் செய்த தீமை பெரியவர் புலம்பலர் பொறுப்பர் அன்றே என்று கூறி - சிறியோர் செய்த பிழையைப் பெரியோர் வெறாராய்ப் பொறுப்பர் அல்லரோ என்று கூறி; அலங்கல் தாது அவிழ - மாலையின் மகரந்தம் சிந்த; அம் செஞ்சீறடி அணிந்த அம்பூஞ் சிலம்பின்மேற் சென்னி சேர்த்தி - அழகிய சிவந்த சிற்றடியில் - அணிந்த அழகிய சிலம்பின்மேல் முடியைச் சேர்த்து; நீக்கினான் - அவளுடலை நீக்கினான்.

   (வி - ம்.) 'அலங்கல் தாது சிலம்பின்மேல் அவிழ' என இயைப்பர் நச்சினார்க்கினியர்.

   ”சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே” என வரும் வெற்றிவேற்கையும் காண்க.

( 94 )
2089 யாழ்கொன்ற கிளவி யாட
  னழிழ்துறழ் புலவி நீக்கிக்
காழின்றிக் கனிந்த காமக்
  கொழுங்கனி நுகர்ந்து காதற்
றாழ்கின்ற தாம மார்பன்
  றையலோ டாடி விள்ளா
னூழ்சென்ற மதியம் வெய்யோ
  னொட்டியொன் றாய தொத்தான்.

   (இ - ள்.) காதல் தாழ்கின்ற தாம மார்பன் - காதலால் தங்குகின்ற சீவகன்; யாழ் கொன்ற கிளவியாள் தன் - யாழை வென்ற மொழியாளின்; அமிழ்து உறழ் புலவி நீக்கி - அமிர்தை