| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1179 |
|
|
| 2091 |
கடிப்பிணை காது சோ்த்திச் | |
சிகழிகை காத நாறத் | |
தொடுத்தலர் மாலை சூட்டிக் | |
கிம்புரி முத்த மென்றோ | |
ளடுத்தணிந் தாகஞ் சாந்தி | |
னணிபெற வெழுதி யல்கு | |
லுடுத்தபொற் கலாபந் தைவந் | |
தொளிவளை திருத்தி னானே. | |
|
|
(இ - ள்.) கடிப்பினை காது சேர்த்தி - கடிப்பிணை என்னும் அணியைக் காதில் அணிந்து; சிகழிகை காதம் நாற - மயிர் முடியின் கண் மணம் காதவழி நாறுமாறு; தொடுத்து அலர்மாலை சூட்டி தொடுக்கப்பட்டு அலர்ந்த மலர் மாலையை அணிந்து; கிம்புரி முத்தம் மென் தோள் அடுத்து அணிந்து ; கிம்புரி வடிவம் உள்ள முத்துமாலையை மெல்லிய தோளிலே அணிந்து ; ஆகம் சாந்தின் அணிபெற எழுதி - மார்பைச் சந்தனத்தாலே அழகுற எழுதி; அல்குல் உடுத்த பொன் கலாபம் தைவந்து - அல்குலிலே அணிந்திருந்த பொன்மேகலையைத் தடவி; ஒளிவளை திருத்தினான் - ஒளிபொருந்திய வளையைத் திருந்த அணிந்தான்.
|
|
(வி - ம்.) கடிப்பு இணை எனக் கண்ணழித்துக் கொள்க. கடிப்பு - ஒருவகைச் செவியணிகலன். சிகழிகை - முடி. முத்தம் - முத்தமாலை. பொற்கலாபம் - பொன்னாலியன்ற மேகலை. தைவந்து - தடவி.
|
( 97 ) |
| 2092 |
இலங்குவெள் ளருவிக் குன்றத் | |
தெழுந்ததண் டகரச் செந்தீ | |
நலங்கிள ரகிலுந் தேனுங் | |
கட்டியு நன்கு கூட்டிப் | |
புலம்பற வளர்த்த வம்மென் | |
பூம்புகை யமளி யங்கண் | |
விலங்கர சனைய காளை | |
வெள்வளைக் கிதனைச் சொன்னான். | |
|
|
(இ - ள்.) இலங்கு வெள் அருவிக் குன்றத்து - விளங்கும் வெள்ளருவி வீழுங் குன்றிலே; எழுந்த தண் தகரச் செந்நீ - தோன்றிய தண்ணிய தகரவிறகின் செந்தீயிலே; நலம்கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி - அழகு விளங்கும் அகிலும் தேனும் நேர்கட்டியும் நன்றாகக் கூட்டி; புலம்பு அற வளர்த்த அம்மென் பூம்புகை அமளி அங்கண் - குற்றமின்றி வளர்த்த புகையினையுடைய அமளிக்கண்ணே; விலங்கரசு
|