பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1182 

2096 ரெற்றுவா ரினைந்து சோர்வார்
  நம்பியோ நம்பி யென்னா
வுற்றுடன் றழுத கண்ணீர்
  காலலைத் தொழுகிற் றன்றே.

   (இ - ள்.) ஒற்றரும் உணர்தல் இன்றி உரை அவித்து - ஒற்றரும் உணராதவாறு மொழியை நீக்கி ; உறுப்பினாலே சுற்றத்தார்க்குரைப்ப - உறுப்பின் குறிப்பாலே உறவினர்க்கெல்லாம் அறிவித்தலின்; ஈண்டித் தொக்கு உடன் தழுவிக்கொள்வார் - அவர்கள் செறிந்து திரண்டு சேரத் தழுவிக்கொள்வாராய்; நம்பியோ! நம்பி! என்னா - நம்பியே! நம்பியே! என்று; எற்றுவார் - அடித்துக்கொள்வாரும்; இனைந்து சோர்வார் - வருந்திச் சோர்வாருமாய் : உற்று உடன்று அழுத கண்ணீர் - வந்த வருந்தி அழுத கண்ணீர்; கால் அலைத்து ஒழுகிற்று - காலையிழுத்து ஒழுகியது.

   (வி - ம்.) இஃது உவகைக்கலுழ்ச்சி.

   ஒற்றரும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. உறுப்பினாலே உரைத்தலாவது இங்கிதத்தான் உணர்த்துதல்.

( 102 )
2097 கந்துகண் கழறக் கல்லென்
  கடற்றிரை யவிந்த வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க
  மறைபுறப் படுமென் றெண்ணி
யெந்தைதா னிறந்த நாளின்
  றெனநக ரியம்பி யாரு
மந்தமி லுவகை தன்னா
  லகங்குளிர்ப் பெய்தி னாரே.

   (இ - ள்.) மறை புறப்படும் என்று எண்ணி - இவ்வுவகையால் இம்மறை வெளியாகும் என்று நினைத்து; கந்துகன் கழற - கந்துகன் கூற; கடல் திரை அவிந்த வண்ணம் வந்தவர் புலம்பு நீங்க - கடல்அலை ஓய்ந்ததுபோல வந்தவர் அழுகையை நிறுத்த; எந்தைதான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி - (உண்டான அழுகையையும் மறைக்க) கந்துகனின் தந்தை இறந்த நாள் இது என நகரத்தார்க்குக் கூறி; அந்தம்இல் உவகை தன்னால் யாரும் அகம் குளிர்ப்பு எய்தினார் - அளவற்ற மகிழ்ச்சியால் எல்லோரும் மனம் அமைதி அடைந்தனர்.

   (வி - ம்.) கடலில் அலையொலி யடங்கியதுபோல. இஃது இல்பொருள் உவமை, அலையொலியடங்குவது உலகில் இல்லை அதனை உவமை கூறியதால்,

( 103 )