| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1183 |
|
|
| 2098 |
செங்கயன் மழைக்கட் செவ்வாய்த் | |
தத்தையு மகிழ்ந்து தீஞ்சொ | |
லெங்கையைச் சென்று காண்மி | |
னடிகளென் றிரந்து கூற | |
மங்கல வகையிற் சோ்ந்து | |
மதுத்துளி யறாத மாலை | |
கொங்கலர் கண்ணி சோ்த்திக் | |
குங்கும மெழுதி னானே. | |
|
|
(இ - ள்.) செங்கயல் மழைக்கண் செவ்வாய்த் தத்தையும் மகிழ்ந்து - செங்கயல் போலும் தண்ணிய கண்களையும் செவ்வாயையும் உடைய தத்தை (இவனைக்கண்டு) மகிழ்ந்து; அடிகள்! - அடிகளே!; தீசொல் எங்கையைச் சென்று காண்மின் என்று இரந்து கூற - இனிய மொழியையுடைய என் தங்கையைச் சென்று காண்மின் என்று வேண்ட; சேர்ந்து - அவனும் அடைந்து; மங்கல வகையில் - மங்கல முறைமையால்; மதுத்துளி அறாத மாலை கொங்கு அலர் கண்ணி சேர்த்தி - தேன்துளி நீங்காத மாலையையும் மணம் கமழும் கண்ணியையும் முதலில் அணிந்து; குங்குமம் எழுதினான் - குங்குமமும் அணிந்தான்.
|
|
(வி - ம்.) சுதஞ்சணன் பன்னிருமதியின் என்றதனைத் தத்தை உணர்தலால் தனக்குக் கூட்டமின்மை உணர்தலானும், அவள் வருத்த மிகுதியானும் இங்ஙனம் இரந்து கூறினாள். குணமாலை, கணவன் வருதலின், மங்கல அணிக்கு உடம்பட்டாள். எனினும் கூட்டத்திற்கு உடம்படாமற் கூறுவது அடுத்த செய்யுளில் விளங்கும்.
|
( 104 ) |
| 2099 |
தீவினை யுடைய வென்னைத் | |
தீண்டன்மி னடிகள் வேண்டா | |
பாவியே னென்று நொந்து | |
பரிந்தழு துருகி நையக் | |
காவியங் கண்ணி யொன்றுங் | |
கவலல்யா னுய்ந்த தெல்லா | |
நாவியே நாறு மேனி | |
நங்கைநின் றவத்தி னென்றான். | |
|
|
(இ - ள்.) தீவினை உடைய என்னை அடிகள்! தீண்டன்மின்! வேண்டா - தீவினை பொருந்திய என்னை அடிகளே தீண்டாதீர்! தீண்ட வேண்டா!; பாவியேன் - ஏனெனில் நான் பாவியேன்; என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய - என்றுரைத்து வருந்தி அன்புற்று அழுது உருகி நையாநிற்க;
|