| மண்மகள் இலம்பகம் |
1191 |
|
|
|
இது குறிஞ்சி நிலத்தை வண்ணித்தது. சூலத்தண்ணல் : சிவபெருமான்.
|
( 4 ) |
| 2106 |
ஊன்றலைப் பொடித்தாங் கனையசெஞ் சூட்டி | |
னெளிமயிர் வாரண மொருங்கே | |
கான்றபூங் கடம்பின் கவட்டிடை வளைவாய்ப் | |
பருந்தொடு கவர்குரல் பயிற்று | |
மான்றவெம் பாலை யழன்மிதித் தன்ன | |
வருஞ்சுரஞ் சுடர்மறை பொழுதி | |
னூன்றினார் பாய்மா வொளிமதிக் கதிர்போற் | |
சந்தன மொருங்குமெய் புதைத்தே. | |
|
|
(இ - ள்.) ஊன் தலைப்பொடித்த அனைய செஞ்சூட்டின் ஒளிமயிர் வாரணம் - ஊனைத் தலையிலே தோன்றிவிட்டாற் போன்ற சிவந்த உச்சிக் கொண்டையையுடைய பளபளப்பான மயிர்நிறைந்த கோழி; கான்ற பூங்கடம்பின் கவட்டிடை வளைவாய்ப் பருந்தொடு - உதிர்ந்த மலர்க்கடம்பின் கவட்டிலே வளைந்த அலகினையுடைய பருந்துடன்; ஒருங்கே கவர்குரல் பயிற்றும் - ஒருங்கேயிருந்து இரைகளை விரும்பிக் கவர்ச்சியான குரலுடன் கூப்பிடுகின்ற; ஆன்ற வெம்பாலை அழன் மிதித்தன்ன அருஞ்சுரம் - நிறைந்த கொடிய பாலைநிலத்தில் நெருப்பை மிதித்தாற்போன்ற அரிய காட்டுவழியை; ஒளிமதிக் கதிர்போல் சந்தனமெய் ஒருங்கு புதைத்து - ஒளியுறுந் திங்களின் தண்கதிர்போலச் சந்தனத்தை உடம்பெலாம் பூசியவாறு ; சுடர்மறை பொழுதின் பாய்மா ஊன்றினார் - அந்திக்காலத்தே பரியைச் செலுத்தினார்.
|
|
(வி - ம்.) ஆங்கென்றது முல்லையுங் குறிஞ்சியும் சேர்ந்த பாலையை. 'முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப், பாலையென்பதோர் படிவங்கொள்ளும் (சிலப் : 11 : 64-6) என்று வருவது காண்க. வாரணமும் பருந்தும் பாலை நிலத்தினது வெப்பமிகுதியால் நாள்வழியிளைப்பால், ஓரிடத்திருந்தும் ஒன்றையொன்று நலியமாட்டாமையின், ஓரிடத்திருந்து கவர்குரல் பயிற்றும் என்றார்.
|
|
வெம்மை மிகுதியின் அந்திக்காலத்தே போனார். 'நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் - படு திரை வையம் பாத்திய பண்பே' (தொல். அகத். 2) என்று பாலைக்கு நிலம் இன்று என்றமையானும், 'நடுவு நிலத்திணையே நண்பகல் வேனிலொடு - முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே' (தொல். அகத். 9) என்றமையானும். அக்காலம் அன்றி, இவர் செல்கின்ற காலம் முன்பனி தொடங்குகின்ற காலமாகவும் பாலை கூறியவாறு என்னை யெனின், காலம் பொதுவாய்த் தேயந்தோறும் வேறுபட்டிருக்கும்; சித்திரையும் வைகாசியும் குடகுமலைக்குக் கார்காலத்தை ஆக்கினாற்போல, மார்கழித் திங்களும் இவர் போகின்ற
|