பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1195 

குத் தெரிவிக்குமாறு கட்டளையிட; நாட்டகத்து அமிர்தும் - நாடுபடு பொருள்களும்; நளிகடல் அமிர்தும் - செறிகடலிற் படும் பொருள்களும்; நல்வரை அமிர்தமும் - நல்ல மலைபடு பொருள்களும்; அல்லா - இவையே அல்லாமல்; காட்டகத்து அமிர்தும் - காடுபடு பொருள்களும்; காண்வரக் குவவி - விளங்குமாறு குவித்து; கண் அகன் புறவு எதிர்கொண்டார் - இடம் பரவிய முல்லை நிலத்தே சீவகன் முதலானோரை எதிர்கொண்டனர்.

   (வி - ம்.) 'வீட்டிடம் : விடுதலையுடைய இடம்' என்பர் நச்சினார்க்கினியர். 'வில்லக விரலிற் பொருந்தி' (குறுந். 370) என்றார் பிறரும்.

   நாட்டிலமிர்து :'செந்நெல் சிறுபயறு செவ்விள நீர்செழுங்

கன்னல் கதலியோ டைந்து'

   கடலமிர்து :'ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோ டைந்து'

   வரையமிர்து :'தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்

கர்ப்பூரம் சாதியோ டைந்து'

   காட்டிலமிர்து :'அரக்கிறால் செந்தேன் அணிமயிற் பீலி

திருத்தகு நாவியோ டைந்து'

   அமிர்து:பொருள்.

( 9 )
2111 பொருமத யானைப் புணர்மருப் பேய்ப்பப்
  பொன்சுமந் தேந்திய முலையா
ரெரிமலர்ச் செவ்வாய் திறந்துதே னூற
  வேத்துவார் பூக்கடூய்த் தொழுவார்
வருகுலைக் கமுகும் வாழையு நடுவார்
  வரையுமி ழாவிபோன் மாடத்
தருநறும் புகையு மேந்துவா ரூர்தோ
  றமரர்த முலகமொத் ததுவே.

   (இ - ள்.) ஊர்தோறு - ஊர்கள் தோறும்; பொருமத யானை புணர்மருப்பு ஏய்ப்பப் பொன் சுமந்து ஏந்திய முலையார் - போர் புரியும் மதக்களிறுகளின் இணைக் கொம்புகளைப் போல, அணிபல சுமந்து நிமிர்ந்த முலையினர்; எரிமலர்ச் செவ்வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் - முருக்கிதழ்போலும் சிவந்த வாயைத் திறந்து இனிமைமிக ஏத்துவாரும்; பூக்கள் தூய்த்தொழுவார் - மலர்களைச் சொரிந்து வணங்குவாரும்; வருகுலைக் கமுகும் வாழையும் நடுவார் - வளருங் குலையையுடைய கமுகையும் வாழையையும் நடுவாரும்; வரைஉமிழ் ஆவிபோல் மாடத்து - மலை உமிழும் புகைபோல, மாடங்களிலே; அருநறும் புகையும் ஏந்துவார் - அரிய நல்ல மணமிகும் புகையையும் ஏந்துவாருமாகி