பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1196 

இருந்ததால், அமரர் தம் உலகம் ஒத்தது - ஒவ்வோரூரினும் அமரருலகம் ஒத்தது.

   (வி - ம்.) ஆவி - நெட்டுயிர்ப்பு. இனி நகரின் செய்தி.

   பொருமதயானை, புணர்மருப்பு என்பன வினைத்தொகைகள், ஏய்ப்ப : உவமவுருபு. பொன் - அணிகலன் : ஆகுபெயர். தூய் - தூவி. வருகுலை:வினைத்தொகை.

( 10 )

வேறு

2112 பாடி னருவிப் பயங்கெழு மாமலை
மாட நகரத்து வாயிலுங் கோயிலு
மாடம் பலமு மரங்கமுஞ் சாலையுஞ்
சேடனைக் காணிய சென்றுதொக் கதுவே.

   (இ - ள்.) பாடு இன் அருவி - ஒலிக்கும் இனிய அருவியையுடைய; பயம் கெழு மாமலை - பயன் பொருந்திய பெரிய மலை போலும்; மாட நகரத்து வாயிலும் கோயிலும் - மாடங்களையுடைய நகரத்திலே வாயிலிலும் கோயிலிலும்; ஆடு அம்பலமும் - கூத்தாடும் அம்பலத்திலும்; அரங்கமும் - மேடைகளிலும்; சாலையும் - வழிகளிலும்; சேடனைக் காணிய - சேடனைப் போலும் சீவகனைக் காண; சென்று தொக்கது - (ஊர்) சென்று கூடியது.

   (வி - ம்.) உலகினைத் தாங்குபவன் ஆதலின் சேடன் என்றார் அம்பலம் - பலருங் கூடும் பொது இடம்; கூத்துக் காணும் இடம் என்றுமாம். அரங்கம் - நாடகம் முதலியன நிகழ்த்தும் மேடை

( 11 )
2113 பல்கதி ராரமும் பூணும் பருமித்துக்
கொல்சின வெந்தொழிற் கோடேந் திளமுலை
நல்லெழின் மங்கையர் நன்னுதற் சூட்டிய
வெல்கதிர்ப் பட்டம் விளங்கிற் றொருபால்.

   (இ - ள்.) பல்கதிர் ஆரமும் பூணும் பருமித்து - பல ஒளிவிடும் முத்துவடங்களையும் பிற கலன்களையும் விளங்க அணிந்து; கொல்சின வெம்தொழில் கோடு ஏந்து இளமுலை - கொல்லும் சினமுடைய கொடிய தொழிலையுடைய யானைக் கொம்பென நிமிர்ந்த இளமுலைகளையுடைய; நல் எழில் மங்கையர் - பேரழகினையுடைய மங்கையரின்; நல்நுதல் சூட்டிய அழகிய நெற்றியில் அணிந்த; வெல்கதிர்ப் பட்டம் ஒருபால் விளங்கிற்று - ஒளிவிடும் பட்டம் ஒரு பக்கம் விளங்கியது.

   (வி - ம்.) ஆரம் - முத்துவடம். பருமித்தல் அணிதல். கொல் சினக்கோடு, வெந்தொழிற்கோடு எனத் தனித்தனியே கூட்டுக. கோடு