| மண்மகள் இலம்பகம் |
1197 |
|
|
|
ஈண்டு யானைக் கொம்பு. மங்கையராகிய யானைகள் என வேண்டாதே உரைத்தார் நச்சினார்க்கினியர்
|
( 12 ) |
| 2114 |
சுண்ணமுஞ் சூட்டுஞ் சொரிந்து வார்குழற் | |
கண்ணிம காரொடு காற்சிலம் பார்த்தெழு | |
வண்ணலைக் காணிய வார்த்திற் போதரும் | |
வண்ண மகளிர் வனப்பிற் றொருபால். | |
|
|
(இ - ள்.) சுண்ணமும் சூட்டும் சொரிந்து - சுண்ணத்தையும் நெற்றிச் சூட்டையும் பெய்து; வார்குழல் கண்ணி மகாரொடு - குலைகின்ற குழலிலே கண்ணியையுடைய குழந்தைகளோடு; கால்சிலம்பு ஆர்த்து எழ - காலிற் சிலம்புகள் ஒலித்தெழ; அண்ணலைக் காணிய ஆர்வத்தின் போதரும் - சீவகனைக் காண வேண்டி விருப்புடன் வருகின்ற; வண்ண மகளிர் வனப்பிற்று ஒருபால் - அழகிய மங்கையரின் பொலிவினை ஒருபக்கம் உடையது.
|
|
(வி - ம்.) தலையிற் சுண்ணம் அணிந்தார் மகார் ஆதலின்.
|
|
சுண்ணம் - நறுமணப்பொடி, சூட்டு - ஒரு நுதலணி. மகார் - மக்கள். அண்ணலை : சீவகனை. காணிய - காணுதற்கு.
|
( 13 ) |
| 2115 |
எதிர்நலப் பூங்கொடி யௌ்ளிய சாயற் | |
கதிர்நல மங்கையர் காறொடர்ந் தோட | |
முதிரா விளமுலை முத்தொடு பொங்க | |
வதிரரிக் கிண்கிணி யார்க்கு மொருபால். | |
|
|
(இ - ள்.) எதிர்நலப் பூங்கொடி எள்ளிய சாயல் - தோன்றிய நலத்தையுடைய பூங்கொடியை இகழ்ந்த சாயலையும்; கதிர்நலம் மங்கையர் - கதிர்த்த நலனையும் உடைய மாதரார் ; முதிரா இளமுலை முத்தொடு பொங்க - தம் முற்றா இளமுலைகள் முத்துடன் பொங்குமாறு; ஓட - ஓடுதலின்; அதிர் அரிக் கிண்கிணி கால் தொடர்ந்து - ஒலிக்கும் பரல்களையுடைய கிண்கிணிகள் (இங்ஙனம் ஓடன்மின் என்று) காலைக் கட்டிக் கொண்டு; ஒருபால் ஆர்க்கும் - ஒருபக்கம் கூப்பிடும்.
|
|
(வி - ம்.) முத்தொடு பொங்கல் : முத்துவடம் புடைத்தற்குத் தாமும் புடைத்தல்.
|
( 14 ) |
| 2116 |
கருங்க ணிளமுலை கச்சற வீக்கி | |
மருங்கு றளர மழைமருண் மாட | |
நெருங்க விறைகொண்ட நேரிழை யார்தம் | |
பெருங்க ணலமரும் பெற்றித் தொருபால். | |
|