பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1199 

   (வி - ம்.) குடை முதலியவற்றின் இருளுமாம்.

   ஆடன் மகளிர் - விறலியர். கலை - மேகலை. ஆவணவீதி - கடைத்தெரு. உக்கவை - சிந்தியவை.

( 17 )
2119 கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக்
காதன் மகளிரு மைந்தருங் காணிய
வீதியு மேலும் மிடைந்து மிடைமலர்த்
தாதடுத் தெங்குந் தவிசொத் ததுவே.

   (இ - ள்.) கொடுங்குழைக் காதல் மகளிரும் மைந்தரும் காணிய - (சீவகனிடம் அன்புடைய) குழையணிந்த மகளிரும் மைந்தரும் அவனைக் காணும் பொருட்டு; கோதையும் தாரும் பிணங்க - கூந்தல் மாலையும் மார்பின் மாலையும் பிணங்கும்படி : வீதியும் மேலும் மிடைந்து - தெருவிலும் மாடங்களின் மேலும் நெருங்கி நிற்றலின்; மிடைமலர்த் தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்தது - நெருங்க வீழ்ந்த மலர்களின் மகரந்தம் படிந்து எங்கும் அணையெனப் பொலிவுற்றது.

   (வி - ம்.) கோதை - ஈண்டு மகளிர் அணிந்த மாலையினையும் - தார், மைந்தர் அணிந்த மாலையினையும் குறித்தன. காணிய - காண. மேல் - மேல்வீடு. தாது - பூந்துகள், தவிசு - இருக்கை.

( 18 )
2120 மானக் கவரி மணிவண் டகற்றவங்
கானை யெருத்தத் தமா குமரனிற்
சேனைக் கடலிடைச் செல்வனைக் கண்டுவந்
தேனை யவர மெடுத்துரைக் கின்றார்.

   (இ - ள்.) அங்கு - அத் தெருவிலே; ஆனை எருத்தத்து - யானையின் பிடரியிலே; அமர குமரனின் - இந்திரன் மகனைப் போல அமர்ந்து; மானக்கவரி மணிவண்டு அகற்ற - சிறந்த கவரிகள் வண்டுகளை ஓட்ட; சேனைக் கடலிடை - படைத்திரளின் நடுவே; செல்வனைக் கண்டு உவந்து சீவகனைக் கண்டு மகிழ்ந்து; ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார் எல்லோரும் எடுத்துப் புகல்கின்றனர்.

   (வி - ம்.) மானக்கவரி - ”மயிர் நீப்பின் வாழா”க் கவரிமானின் மயிர் : ஆகுபெயர். ஆனை - யானை. எருத்தம் - பிடரி. செல்வன் : சீவகன்.

( 19 )
2121 தேமல ரங்கட் டிருவே புகுதக
மாமலர்க் கோதை மணாளன் புகுதக
காமன் புகுதக காளை புகுதக
நாம வெழில்விஞ்சை நம்பி புகுதக.