பக்கம் எண் :

பதிகம் 12 

14 பொன்றுஞ்சு மார்பன் புனலாட்டிடைப் புன்கணெய்தி
நின்றெஞ்சு கின்ற ஞமலிக்கமிர் தீந்த வாறு
மன்றைப் பகலே குணமாலையை யச்சு றுத்த
வென்றிக் களிற்றை விதாரவன் வென்ற வாறும்.

   (இ - ள்.) பொன் துஞ்சும் மார்பன் - திருமகள் தங்கும் மார்பன்; புனல் ஆட்டிடை எஞ்சுகின்ற ஞமலிக்குப் புன்கண் எய்தி நின்று அமிர்து ஈந்த ஆறும் - நீர்விளையாட்டிலே உயிர் போகின்ற நாய்க்குத் தானும் வருத்தமுற்று நின்று பஞ்ச நமஸ்காரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும் ; அன்றைப் பகலே குணமாலையை அச்சுறுத்த வென்றிக் களிற்றை - அறம் புரிந்த அப் பகலே குணமாலையை அச்சம் ஊட்டிய (முன்பு) வென்றியுடைய களிற்றை; விரிதாரவன் வென்ற ஆறும் - (மார்பின் சிறப்பால் உலகு) புகழ்ந்த தாரணிந்த சீவகன் வென்ற படியும்;

 

   (வி - ம்.) அச்சம் உறுத்த : அச்சுறுத்த : விகாரம். சீவகன் மார்பிலே தங்கிய சிறப்பினாலே அத் தார் உலகாற் புகழப் பெற்றது. வென்றி - வெற்றி.

( 9 )
15 தேனூறு தீஞ்சொற் குணமாலையைச் சேர்ந்த வாறுங்,
கோனூறு செய்வான் கருதிச்சிறை கொண்ட வாறும்,
வானா றிழிந்து மழைமின்னென வந்தொர் தேவ
னூனா றொளிவே லுரவோற்கொண் டெழுந்த வாறும்,

   (இ - ள்.) தேன் ஊறு தீ சொல் குணமாலையைச் சேர்ந்த ஆறும் - தேனின் இனிமை நீங்காத இனிய சொல்லையுடைய குணமாலையைச் சேர்ந்தபடியும் ; கோன் ஊறு செய்வான் கருதி - கட்டியங்காரன் கொல்வதற்குக் 1கருத ; சிறை கொண்ட ஆறும் - முற்பிறப்பின் தீவினையாகிய சிறை வந்து சீவகனைக் கைக்கொண்ட படியும் ; ஓர் தேவன் மழைமின் என வான் ஆறு வந்து இழிந்து - ஒரு தேவன் மழைமீது ஏறி மின்போல வான வழியாக வந்து; ஊன் நாறு ஒளிவேல் உரவோன் கொண்டு எழுந்த ஆறும் - ஊன் கமழும் ஒளிதரு வேலேந்திய சீவகனைக் கைக்கொண்டு போனபடியும்;

 

   (வி - ம்.) செய்வான் : எதிர்கால வினையெச்சம். 'கருதி' யென்பது 'கருத' என நின்றது. 'உரற்கால்யானை ஒடித்துண்டு '(குறுந் - 282) என்னுஞ் செய்தென் எச்சம் பிறவினை கொண்டாற் போல, சிறை - அன்னப் பார்ப்பை (இவன் முற்பிறப்பிற்) சிறை செய்தது. ஒரு தேவன்

 

1. கருதி எனவே கொண்டு சிறை கொண்டதைக் கட்டியங்காரனுக்கு ஆக்கலே அடுத்த செய்யுளுக்கும் ஏற்புடைத்தாக இருக்கிறது.