| நாமகள் இலம்பகம் |
120 |
|
|
யிற் கிடந்த தெய்வ வுத்தியும் சிதறும் முயக்கத்தினராய்; அருமாமணி நாகரின் ஆயினர் - அரிய பெரிய மாணிக்கத்தையுடைய நாகரைப்போல் ஒன்றாயினர்.
|
|
|
(வி - ம்.) காமவின்ப நுகர்ச்சியில் நாகர் சிறந்தவர் என்பதுபற்றி நாகரின் ஆயினர் என்றார். ”நாகநீள் நகரொடு போகம் மன்னும் புகார்” (1. 21-22) என்றார் இளங்கோவடிகளாரும்.
|
( 188 ) |
| 218 |
நறவார்ந் ததொர்நா கிளந்தா மரைவா |
| |
யுறவீழ்ந் ததொரொண் மணிபோன் றுரவோ |
| |
னறவாக் கியவின் பமமர்ந் தவிருட் |
| |
கறைவேற் கணினாள் கனவுற் றனளே. |
|
|
(இ - ள்.) அமர்ந்த இருள் - அவ்வாறு நாகரைப்போல இன்பம் அமர்ந்த இருளிலே; நறவு ஆர்ந்தது ஒர்நாகு இளந்தாமரைவாய் - தேன் நிறைந்த மிக்க இளமை பொருந்திய தாமரையில் ; வீழ்ந்ததுஓர் ஒண்மணி போன்று உரவோன் உற - வீழ்ந்த ஒரு முத்தைப்போன்று சீவகன் விசயையின் கருவில் உற; இன்பம் அறவு ஆக்கிய கனவு கறைவேல் கணினாள் உற்றனள் - அப்பொழுதே இன்பம் அறுதலை ஆக்கிய கனவைக் குருதிக்கறை பொருந்திய வேலனைய கண்ணினாள் கண்டாள்.
|
|
|
(வி - ம்.) தேன் நிறைதலும் மிக்க இளமையும் மாறாத தாமரை எனவே பதுமயோனியாம். உறவோன் உற - பிள்ளையார் (சீவகன்) அவதரிக்க. அறவு : தொழிற்பெயர்.
|
|
|
நாகிளந் தாமரை : ஒரு பொருட் பன்மொழி. கணினாள் - கண்ணினாள். இருள் : இரவிற்கு ஆகுபெயர். கனா - குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றுக் கனவு என்றாயிற்று.
|
( 189 ) |
வேறு
|
|
| 219 |
பஞ்சி யடிப்பவ ளத்துவர் வாயவ |
| |
டுஞ்சு மிடைக்கன மூன்றவை தோன்றலி |
| |
னஞ்சி நடுங்கின ளாயிழை யாயிடை |
| |
வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே. |
|
|
(இ - ள்.) பஞ்சிஅடிப் பவளத் துவர்வாயவள் - பஞ்சியனைய அடியும் பவளமனைய சிவந்த வாயையுமுடையவளாகிய விசயை; துஞ்சும் இடைக் கனமூன்று - துயிலிடைக் கண்ட கனவு மூன்று; அவை தோன்றலின் - அவை பின்பு மனத்தே தோன்றலின்; ஆயிழை அஞ்சி நடுங்கினள் - ஆயிழையாள் அச்சமுற்று மெய்விதிர்ப்புற்றனள்; ஆயிடை வெஞ்சுடர் தோன்றி விடிந்தது - அக்காலத்தே வெங்கதிரவன் தோன்றி விடிவுற்றது.
|
|