பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1201 

கண்ணினையும் உடைய மகளிர்; வாழ்த்துபு நிற்பார் - வாழ்த்தி நிற்பார்கள்.

   (வி - ம்.) இடி நறுஞ்சுண்ணம் : வினைத்தொகை. சார் - இடம். கடி : மணம். துடி - உடுக்கை. தொண்டை - கொவ்வைக்கனி. வடி - மாம்பிஞ்சு. வாழ்த்துபு - வாழ்த்தி.

( 22 )
2124 சுரும்பிமிர் மாலை தொழுவனர் நீட்டி
யிரும்பிடி நின்னடை கற்ற வெமக்கு
விரும்பினை யாய்விடின் மெல்ல நடமோ
கருங்கணிற் காமனைக் காணமற் றென்பார்.

   (இ - ள்.) இரும்பிடி! - கரிய பிடியே!; நின் நடை கற்ற எமக்கு - உன் நடையைக் கற்ற எமக்கு; விரும்பினையாய்விடின் - அன்புற்றாய் ஆயின்; காமனைக் கருங்கணின் காண - இக்காமனை எம் கரிய கண்ணாலே காண; மெல்ல நட - மெல்ல நடப்பாயாக; என்பார் - என்று கூறி; சுரும்பு இமிர் மாலை நீட்டித் தொழுவனர் - வண்டுகள் முரலும் மாலையைக் கொடுத்துத் தொழுதார்கள்.

   (வி - ம்.) இது பிடிக்குமுன் நின்ற மகளிர் கூற்று. மோ : முன்னிலை அசை.

   தொழுவனர் தொழுதனர் : இறந்தகால வினைமுற்று. இரும்பிடி. விளி நடமோ நடப்பாயாக! மோ : முன்னிலையசை. கணின் கண்ணால். காமனை : சீவகனை. மற்று : அசை. என்பார் : முற்றெச்சம்.

( 23 )
2125 மடநடை பெண்மை வனப்பென்ப தோராய்
கடுநடை கற்றாய் கணவ னிழப்பாய்
பிடியலை பாவி யெனப்பூண் பிறழ்ந்து
புடைமுலை விம்மப் புலந்தனர் நிற்பார்.

   (இ - ள்.) மடநடை பெண்மை வன்ப்பு என்பது ஓராய் - மென்னடையே பெண்மைக்கு அழகு என்பதை அறியாயாய்; கடுநடை கற்றாய்! - கடுநடையைக் கற்ற நீ; கணவன் இழப்பாய் - கணவனை இழப்பாய்; பாவி! பிடி அலை! -பாவியே! நீ பிடி யல்லை; என - என்று கூறி; பூண் பிறழ்ந்து - அணிகலன் பிறழ; முலைபுடை விம்மப் புலந்தனர் நிற்பார் - முலைகள் பக்கத்தே விம்ம வெறுத்து நிற்பார்கள்.

   (வி - ம்.) இது பிடிக்குப் பின் நின்ற மகளிர் கூற்று.

   மடநடை - மென்னடை; பெண்மைக்கு வனப்பு என்க. பிடியல்லை - பிடியலை என நின்றது. பாவி : விளி. புடை - பக்கம். புலந்தனர் : முற்றெச்சம்.

( 24 )