| மண்மகள் இலம்பகம் | 
1204  | 
 | 
  | 
| 2130 | 
குழையொளி முகமுங் கோலக் |   | 
  கொழுங்கயற் கண்ணுந் தோன்ற |   | 
மழைமின்னுக் குழாத்தின் மாலை |   | 
  மங்கையர் மயங்கி நின்றார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இழை ஒளி பரந்த கோயில் மாலை மங்கையர் - அணிகலனின் ஒளி பரவிய அக்கோயிலில் உள்ள மங்கையர் - விழைதகு கமல வட்டத்திடை - விரும்பத் தகுந்த தாமரை மலரின் வட்டத்திடையே; இனம் மலர்க் குவளைப் பொற்பூ விராய்ப் பூத்தவே போல் - இனமாகிய மலர்ந்த குவளை பொன் மலர்களுடன் கலந்து, பூத்தன போல; குழை ஒளி முகமும் கோலக் கொழுங்கயல் கண்ணும் தோன்ற - குழையொளி பரவிய முகமும் அழகிய கொழுவிய கயற் கண்ணும் விளங்க; மழை மின்னுக் குழாத்தின் மயங்கி நின்றார் - நின்றார் - முகிலினிடை மின்னுத் திரள் போல மயங்கி நின்றனர். 
 | 
| 
    (வி - ம்.) பொற்பூ : குழை. குவளை; கண். தாமரை : முகம் மழை : கூந்தல். 'இனமலர்க் கமலப் பொற்பூ விழைதரு குவளை' எனவும் பாடம். 
 | 
( 29 ) | 
| 2131 | 
எரிக்குழாஞ் சுடரும் வையே |   | 
  லேந்தலைக் கண்டு கோயிற் |   | 
றிருக்குழா மனைய பட்டத் |   | 
  தேவியர் மகிழ்ந்து செய்ய |   | 
வரிக்குழா நெடுங்க ணாரக் |   | 
  கொப்புளித் துமிழ வம்பூ |   | 
விரைக்குழா மாலைத் தேனும் |   | 
  வண்டுமுண் டொழுக நின்றார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) எரிக்குழாம் சுடரும் வைவேல் ஏந்தலை - எரியின் திரளென ஒளிரும் கூரிய வேலேந்திய சீவகனை; கோயில் திருக்குழாம் அனைய பட்டத் தேவியர் - கோயிலில் உள்ள திருமகளிரின் குழு அனைய பட்டத் தரசிகள்; செய்ய வரிக்குழாம் நெடுங்கண் ஆரக் கண்டு மகிழ்ந்து - செவ்வரித் திரளையுடைய நீண்ட கண்கள் நிறையக் கண்டு களித்தது; அம்பூ குழாம் விரை மாலைத் தேனும் வண்டும் உண்டு கொப்புளித்து உமிழ ஒழுக நின்றார் - அழகிய மலர்த் திரளாகிய மணமுறு மாலையிலே தேனும் வண்டும் தேனைப் பருகிக் கொப்புளித்து உமிழ்தலால் தேன்வடிய (மாலைத்திரளிலே மறைந்து) நின்றார். 
 | 
| 
    (வி - ம்.) இங்ஙனம் ஒரு மகனைப் பெற்றேமே என்று மகிழ்ந்தனர். 
 |