| மண்மகள் இலம்பகம் |
1205 |
|
|
| 2133 |
தாமரைப் போதிற் பூத்த | |
தண்ணறுங் குவளைப் பூப்போற் | |
காமரு முகத்திற் பூத்த | |
கருமழைத் தடங்கண் டம்மாற் | |
றேமலர் மார்பி னானை | |
நோக்கினாள் செல்வன் மற்றப் | |
பூமலர்க் கோதை நெஞ்ச | |
மூழ்கிப்புக் கொளித்திட் டானே. | |
|
|
(இ - ள்.) தாமரைப் போதில் பூத்த தண் நறுங் குவளைப் பூப்போல் - தாமரை மலரிலே மலர்ந்த தண்ணிய அழகிய குவளை
|
|
பூவில் விரை பொழுகுதலாலே தேனும் வண்டும் முதற் கொப்புளித்துப் பின் ஆரவுண்டு உமிழும்படி திரளுதலையுடைத்தாகிய மாலை என்க.
|
( 30 ) |
| 2132 |
அலங்கறா தவிழ்ந்து சோர | |
வல்குற்பொற் றோரை மின்னச் | |
சிலம்பின்மேற் பஞ்சி யார்ந்த | |
சீறடி வலத்த தூன்றி | |
நலந்துறை போய நங்கை | |
தோழியைப் புல்லி நின்றா | |
ளிலங்கொளி மணித்தொத் தீன்ற | |
வேந்துபொற் கொடியோ டொப்பாள். | |
|
|
(இ - ள்.) இலக்கு ஒளி மணித்தொத்து ஈன்ற ஏந்து பொன் கொடியோடி ஒப்பாள் - விளங்கும் ஒளியையுடைய மணிக்கொத்துப் பெற்ற விளங்கிய பொற்கொடி போன்றவள் ஆகிய; நலம் துறை போய நங்கை - அழகின் கூறெல்லாம் நிரம்பிய நங்கை : அலங்கல் தாது அவிழ்ந்து சோர - மலர்மாலையிலே தாது சிந்திச் சோர; அல்குல் பொன் தோரை மின்ன - (உடை நெகிழ்தலால்) அல்குலிலே பொன் வடம் மின்ன; சிலம்பின்மேல்-இடக்காலிற் சிலம்பின்மேல்; வலத்தது பஞ்சு ஆர்ந்த சீறடி ஊன்றி - வலத்ததாகிய செம்பஞ்சியூட்டிய சிற்றடியை ஊன்றி; தோழியைப் புல்லி நின்றாள் - தோழியைத் தழுவி நின்றான்.
|
|
(வி - ம்.) இவள் இலக்கணை.
|
|
அலங்கல் - மலர்மாலை. தாது - பூந்துகள். தோரை - வடம் பொற்றேரை, பொற்றாரை என்றும் பாடம், வலத்ததாகிய சீறடி என்க. நலம் - அழகு, துறைபோதல் - நிரம்புதல். கொடியோ டொப்பாளாகிய நங்கை நின்றாள் என்க.
|
( 31 ) |