பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1206 

மலர்போல்; காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண் தம்மால் - விருப்பம் வரும் முகத்திலே மலர்ந்த கரிய பெரிய மழைக்கண்களால்; தேன் மலர் மார்பினானை நோக்கினாள் - தேனையுடைய மலர் மார்பினானைப் பார்த்தாள்; செல்வன் அப்பூமலர்க் கோதை நெஞ்சம் புக்கு மூழ்கி ஒளித்திட்டான் - சீவகனும் அந்த அழகிய மலர்க் கோதையாளின் உள்ளத்திலே புகுந்து மூழ்கி மறைந்திட்டான்.

   (வி - ம்.) அவனை அவள் கண்ணால் நோக்கி நெஞ்சில் அமைத்தாள் என்பதாம். அவனும் அவள் நெஞ்சிலே மறைந்து புக்கு அவ்விடத்தினின்றும் போந்து கட்புலனாகாமையாகயினான் என்று கூறி 'மூழ்க எனத் திரித்து, நெஞ்சிலே புக்கு மூழ்க ஒளித்தான்' என்றும் கூறலாமென்பர் நச்சினார்க்கினியர்.

( 32 )

வேறு

2134 விண்ணாறு செல்வார் மனம்பேதுறப் போந்து வீங்கிப்
பண்ணாறு சொல்லாண் முலைபாரித்த வென்று நோக்கக்
கண்ணாறு சென்ற களியைங்கணைக் காம னன்ன
புண்ணாறு வேலான் மனமூழ்கினள் பொன்ன னாளே.

   (இ - ள்.) விண்ஆறு செல்வார் மனம் பேது உறப் போந்து - வானுலகிலே வாழ்வோரின் மனம் வருத்தமடைய அமிர்தகலசம் வந்து; வீங்கி - முன்னினும் பருத்து; பண்நாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க - இசை போன்ற சொல்லாளின் முலையாகத் தோன்றின, என்று சீவகன் அவளை நோக்கின அளவிலே; கண் ஆறு சென்ற களி ஐங் கணைக் காமன் அன்ன புண் நாறு வேலான் - கண்ணுக்குப் புலனாகிய களிப்பையுடைய ஐங்கணைக் காமனைப் போன்ற, புண் பொருந்திய வேலானாகிய சீவகனின்; மனம் பொன்னனாள் மூழ்கினள் - மனத்திலே திருவனையாள் மூழ்கினள்.

   (வி - ம்.) இனி, வானவருலகிலிருந்து அமிர்த கலசம் போந்து இவள் முலையாகப் பாரித்தன என்றும், அம் முலைகளைக் கண்டு வானவர் வருந்தினாரென்றுங் கூறுதல் குற்றமெனக் கொண்டு நச்சினார்க்கினியர்.

   ”தேவருலகிலே சாசாசரன் என்னும் தேவர்கோவாயிருந்த சீவகன், இவ்வுலகிற்குப் போகின்றானென்று மனம் வருந்தும்படி போந்து, இவ்வுலகிலே கண்ணுக்குப் புலனாதலைப் பொருந்தின காமனைப் போன்றான்” என்று நூலாசிரியர் வியந்து கூறினதாகக் கூறுவர். அங்ஙனமாயின், 'விண்ணாறு சொல்லார் மனம் பேதுறப் போந்து கண்ணாறு சென்ற கனி ஐங்கணைக் காமன் அன்ன புண்ணாறு வேலான், 'பண்ணாறு சொல்லாள், முலை பாரித்த என்று நோக்கப் பொன்னனாள் மனம் மூழ்கினள்' என இயைத்தல் வேண்டும்

   சீவகன் முற்பிறப்பில் பதினாறு கற்ப லோகங்களுள் ஒன்றான ஸஹஸ்ரார கற்பத்தில் இந்திரனாக இருந்தான் என்ற கதையை உட்