பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1209 

   (வி - ம்.) பகை நரம்பிசையுங் கேளாக் கோயில் என்றது எக்காலத்தும் பகையால் உண்டாகும் துன்பம் சிறிதும் நுகர்ந்தறியாத அரண்மனை என்றவாறு. என்றது முந்நீர் மடைதிறந்தாற் போன்றலறுதற்குக் குறிப்பேதுவாக நின்றது. விலாவணை - அழுகை.

( 37 )
 

   (இ - ள்.) பல்கதிர் மணியும் முத்தும் பவழமும் குயிற்றிச் செய்த - பல்லொளி தவழும் மணியும் முத்தும் பவழமும் அழுத்திச் செய்த; செல்வப் பொன் கிடுகு சூழ்ந்த - செல்வமுடைய பொன்னாலாகிய கிடுகுகள் சூழ்ந்த; சித்திர கூடம் எங்கும் - சித்திர கூடம் முழுதும்; மல்குபூந் தாமம் தாழ்ந்து - நிறைந்த மலர்மாலையாலே தாழப்பட்டு : மணிப்புகை கமழ - அழகிய புகை தவழா நிற்க; வேந்தன் வெல்புகழ் பரவ - அரசன் வென்ற புகழைப்பாட; விதிஉளி எய்தினான் - முறைப்படி அதனை அடைந்தான்.

   (வி - ம்.) குயிற்றி - பதித்து. கிடுகு - கீற்று. தென்னையோலையாற் செய்யும் கிடுகுபோலப் பொன்னாற் செய்த கிடுகினால் வேயப்பட்ட சித்திரகூடம் என்பது கருத்து. தாழ்ந்து - தாழப்பட்டென்க. மணி - அழகிய. விதியுளி - முறைப்படி. 'ஏத்தாளிகள் புகழைப் பரவ' என்பர் நச்சினார்க்கினியர்.

( 38 )
 

   (இ - ள்.) எரி மணி அடைப்பை - ஒளிரும் மணிகளிழைத்த அடைப்பையையும், செம்பொன் படியகம் - செம்பொன்னால் ஆகிய காளாஞ்சியையும்; இலங்கு பொன்வாள் - விளங்கும் பொன் வாளையும்; கருமணி முகடு வேய்ந்த கஞ்சனை - நீல மணியால் வாய் மூடப் பெற்ற கலசப்பானையையும்; கவரி - கவரியையும்; கொண்ட வருமுலை மகளிர் - ஏந்திய, வளரும் முலைகளையுடைய பெண்கள்; வான் தவிசு அடுத்து வைத்து