பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1211 

2142 வேற்றுமை யின்றி வேண்டுட்
   டமைத்தன னருளி யிப்பா
லேற்றுரி முரச நாண
  வெறிதிரை முழக்கிற் சொன்னான்.

   (இ - ள்.) மாற்றவன் ஒற்றர் ஒற்றா வகையினில் - பகைவன் ஒற்றர் ஆராயாத முறையிலே; மறைய நம்பிக்கு ஆற்றின தோழர்க் கெல்லாம் - மறைவாக, சீவகனுக்குத் துணையாகிய தோழர்கட்கெல்லாம்; வேண்டும் ஊட்டு அடிசில் ஆடை அணிகலம் வேற்றுமையின்றி அமைத்தனன் அருளி - தாம் தாம் விரும்பிய பொருள்களையுடைய உணவு உடை அணிகலம் முதலியவற்றைச் சீவகற்கும் அவர்கட்கும் வேறுபாடின்றி அமைத்தனனாகத் தலையளி செய்துவிட்டு; இப்பால் ஏற்றுரி முரசம் நாண எறிதிரை முழக்கில் சொன்னான் - இனி, வெற்றி கொண்ட ஏற்றின் உரிபோர்த்த முரசம் நாணுமாறு மோதும் அலையையுடைய கடல் முழக்குப் போல ஒரு மொழி கூறினான்.

   (வி - ம்.) 'வென்ற தன் பச்சை சீவாது போர்த்த - திண்பிணி முரசம்' (புறநா. 288) என்றார் பிறரும். நீ கொன்ற சீவகன் தோழர்க்குக் கோவிந்தன் சிறப்புச் செய்தான் என்று ஒற்றர் கட்டியங்காரற்குக் கூறினால், மேல் உறவாகி அவனைக் கொலைசூழ்வது தவறும் என்று கருதி, மறையக் கொடுத்தான். சீவகன் வேறொரு வடிவமாக இருத்திலின், அவனை ஒற்றல் இயலாதென்பர்.

( 41 )
2143 கட்டியங் கார னம்மைக்
  காண்பதே கரும மாக
வொட்டித் தான் விடுத்த வோலை
  யுளபொரு ளுரைமி னென்னத்
தொட்டுமேற் பொறியை நீக்கி
  மன்னனைத் தொழுது தோன்ற
விட்டலர் நாகப் பைந்தார்
  விரிசிகன் கூறு மன்றே.

   (இ - ள்.) கட்டியங்காரன் நம்மைக் காண்பதே கருமம் ஆக ஒட்டி - கட்டியங்காரன் நம் கருத்தறிதலே பொருளாக்கருதி; தான் விடுத்த ஓலை உள பொருள் உரைமின் என்ன - அவன் வரவிட்ட ஓலையில் உள்ள பொருளைக் கூறுமின் என்று அரசன் பணித்தவுடன்; தொட்டுமேல் பொறியை நீக்கி - ஓலையை எடுத்து மேலிட்டிருந்த இலச்சினையை நீக்கியபின்; மன்னனைத் தொழுது - வேந்தனை வணங்கி; விட்டு அலர் நாகப் பைந்தார் விரிசிகன் தோன்றக் கூறும் - முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த நாக