| மண்மகள் இலம்பகம் |
1213 |
|
|
|
கொய் உளை மாக்கள் குத்தி - கத்தரிக்கப்பட்ட பிடரி மயிரையுடைய புரவிக்களை குத்தி; இடு கொடி அணிந்த மார்பர் இருவிசும்பு ஏறச் சீறி - எழுது கொடியணிதற்குக் காரணமான மார்பையுடைய வீரர்கள் வானேறப் பிளிறி; அலமர அதனை நோனான் - அலைய, அதன் செயலைப் பொறாதவனாகி;
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
|
இதன் கண்ணும் அடுத்த செய்யுளினும், சச்சந்தன் சாவிற்குக் கட்டியங்காரன் பொய்க்காரணம் காட்டியபடி கூறப்படுகின்றது.
|
|
அசனிவேகம் சச்சந்தனைக் கொன்றது; அப்பழி என் மேனின்றது என்பது கருத்து.
|
( 44 ) |
| 2146 |
நூற்றுவர் பாகர் தம்மைப் | |
பிளந்துயி ருண்ட தென்னு | |
மாற்றத்தைக் கேட்டுச் சென்று | |
மதக்களி றடக்கி மேற்கொண் | |
டாற்றலங் கந்து சோ்த்தி | |
யாப்புற வீக்கும் போழ்திற் | |
கூற்றென முழங்கி வீழ்த்துக் | |
கொல்லக்கோ லிளகிற் றன்றே. | |
|
|
(இ - ள்.) நூற்றுவர் பாகர் தம்மைப் பிளந்து உயிர் உண்டது என்னும் மாற்றத்தைக் கேட்டு - (மேலும் அது) தான் ஏவிய பாகர் நூற்றுவரைப் பிளந்து கொன்றது என்னும் மொழியைக் கேட்டு; சென்று மத களிறு அடக்கி மேற்கொண்டு - தான் போய் அம் மத யானையை அடக்கி அதன்மேல் அமர்ந்து; ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்பு உற வீக்கும் போழ்தில் - திண்ணிய தூணிலே சேர்த்துத் திறமுறக் கட்டும்போது; கூற்று என முழங்கி வீழ்த்துக் கொல்ல - அசனிவேகம் கூற்றுவன் போலச் சீறி அரசனை வீழ்த்திக் கோறலின்; கோல் இளகிற்று - அரசன் பட்டான்.
|
|
(வி - ம்.) கோல் இளகிற்று : மங்கல மரபு.
|
|
பாகர் நூற்றுவர்தம்மை என மாறுக. சச்சந்தன் கேட்டென்க. கந்து - தறி.
|
( 45 ) |
| 2147 |
தனக்கியா னுயிரு மீவேன் | |
றான்வரப் பழியு நீங்கு | |
மெனக்கினி யிறைவன் றானே | |
யிருநிலக் கிழமை வேண்டி | |
|