பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1215 

   (வி - ம்.) நட்பாய்ப் போதுதலை, மதியாற் சூழும் சூழ்ச்சி என்றனர்.

   நகை - ஈண்டுச் சினம்பற்றி எழுந்தது. கட்டியங்காரன் பேதைமை பற்றியுமாம். 'கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்' என்னுந் திருக்குறளையும் ஈண்டு நினைக.

( 47 )
2149 கள்ளத்தா னம்மைக் கொல்லக்
  கருதினா னாமுந் தன்னைக்
கள்ளத்தா லுயிரை யுண்ணக்
  கருதினே மிதனை யாரு
முள்ளத்தா லுமிழ வேண்டா
  வுறுபடை வந்து கூட
வள்ளுவார் முரச மூதூ
  ரறைகென வருளி னானே.

   (இ - ள்.) கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான் - கட்டியங்காரன் நம்மை வஞ்சகமாகக் கொல்ல நினைத்தான்; நாமும் தன்னைக் கள்ளத்தால் உயிரை உண்ணக் கருதினேம் - நாமும் அவனை வஞ்சகத்தால் உயிரை வாங்க நினைத்தோம்; இதனை யாரும் உள்ளத்தால் உமிழ வேண்டா - இதனை எவரும் உள்ளத்தினின்றும் வெளியிட வேண்டா; மூதூர் உறுபடை வந்து கூட - பழம்பதியிலே மிகுதியான படைகள் வந்து கூடுமாறு; வள்ளுவார் முரசம் அறைக என அருளினான் - வள்ளுவர்கள் முரசு அறைக என்று வேந்தன் அருளிச் செய்தான்.

   (வி - ம்.) வள்ளுவார்; பெயர்த்திரிசொல் என்பர் நச்சினார்க்கினியர். உள்ளத்தாற்பகைமைக் கருத்தை உமிழ வேண்டா என்றதனால் நட்பென முரசறைந்து வெளியிட்டுக் கூறும்படி மொழிந்தானாயிற்று.

( 48 )
2150 கட்டியங் கார னோடு
  காவல னொருவ னானான்
விட்டுநீர் நெல்லும் பொன்னும்
  வழங்குமின் விளைவ கூறி
னொட்டல னிறைவன் சொன்னீர்
  நாநும வல்ல வென்னக்
கொட்டினான் றடங்கண் வள்வார்க்
  குளிறிடி முரச மன்றே.

   (இ - ள்.) காவலன் கட்டியங்காரனோடு ஒருவன் ஆனான் - நம் வேந்தன் பகைமையை விட்டுக் கட்டியங்காரனோடு உறவாகினான்; விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் - (எனவே