| மண்மகள் இலம்பகம் | 
1217  | 
 | 
  | 
| 2152 | 
கூற்றுடன் றனைய தானை |   | 
  கொழுநில நெளிய வீண்டிப் |   | 
பாற்கடற் பரப்பின் வெள்வாட் |   | 
  சுடரொளி பரந்த வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஏற்றுஉரி போர்த்த வள்வார் இடிமுரசு அறைந்த பின்நாள் - விடையின் தோலைப் போர்த்த இறுகிய வாரையுடைய, இடியென முழங்கும் முரசினை அறைந்த மற்றைநாள்; காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப - காற்றினால் மோதப்படும் கடலிலிருந்து கிடைத்த சங்கும் முழவமும் முரசும் ஒலிக்க; கூற்று உடன்ற அனைய தானை கொழுநிலம் நெளிய ஈண்டி - கூற்றுவன் சினந்தாற் போன்ற படை கொழுவிய நிலம் நெளியுமாறு கூடியதனால்; பாற்கடல் பரப்பின் வெள்வாள் சுடர் ஒளி பரந்த - பாற்கடலின் பரப்பைப்போல, வெண்மையான வாளின் சிறந்த ஒளி பரவின். 
 | 
| 
    (வி - ம்.) ஏற்றுரி - காளையின் தோல். இடிமுரசம் : வினைத்தொகை : உவமைத்தொகையுமாம். காற்றால் எறியப்பட்ட கடல் போல என்க. தானை - படை. வெள்ளிய வாட்படை பிறழ்தல் பாற்கடல் போல் தோன்றிற்று என்க. 
 | 
( 51 ) | 
| 2153 | 
புதையிரு ளிரியப் பொங்கிக் |   | 
  குங்குமக் கதிர்க ளோக்கி |   | 
யுதையத்தி னெற்றி சோ்ந்த |   | 
  வொண்சுடர்ப் பருதி போலச் |   | 
சுதையொளி மாடத் துச்சி |   | 
  வெண்குடை நீழற் றோன்றி |   | 
விதையத்தார் வென்றி வேந்தன் |   | 
  விழுப்படை காணு மன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) புதை இருள் இரியப் பொங்கி - மிக்க இருள் கெடுமாறு பொங்கி; குங்குமக் கதிர்கள் ஓக்கி - செந்நிறக் கதிர்களை வீசி; உதையத்தின் நெற்றி சேர்ந்த - உதய மலையின் உச்சியிலே எழுந்த; ஒண்சுடர் பருதி போல - சிறந்த ஒளியை வீசும் ஞாயிறு போல; சுதை ஒளி மாடத்து உச்சி - வெண்மையான ஒளியையுடைய மாடத்தின் உச்சியிலே; வெண்குடை நீழல் - வெண்குடையின் நீழலிலே; விதையத்தார் வென்றி வேந்தன் தோன்றி - விதைய நாட்டு வென்றி மன்னன் எழுந்தருளி; விழுப்படை காணும் - தன் சிறந்த படையை நோக்கத் தொடங்கினான். 
 |