| நாமகள் இலம்பகம் |
122 |
|
|
(வி - ம்.) எய்துக என்று : எய்து கென்று: அகரம் தொகுத்தல் விகாரம், பரிமான் - குதிரை. மான் : ன் : சாரியை.
|
|
|
அ : உலகறி பொருண் மேற்று [உலகறி சுட்டு]
|
( 192 ) |
| 222 |
தானமர் காதலி தன்னொடு மாவலி |
| |
வானவர் போன்மகிழ் வுற்றபின் வார்நறுந் |
| |
தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக் |
| |
கானமர் கோதை கனாமொழி கின்றாள். |
|
|
(இ - ள்.) மாவலி தான்அமர் காதலி தன்னொடு வானவர் போல் மகிழ்வு உற்றபின் - மாவலிமையுடைய சச்சந்தன் தன்னால் விரும்பப்பட்ட காதலியுடன் வானவர்தம் நோக்கத்தால் நுகர்வதுபோல இவனும் மகிழ்வுற்ற பிறகு; தேன்எனப் பால் எனச் சில்அமிர்து ஊற்றுஎன - தேனும் பாலும் அமிர்தின் ஊற்றும்போல; கான்அமர் கோதை கனா மொழிகின்றாள் - மணம் பொருந்திய கோதையாள் தான் கண்ட கனவைக் கூறுகின்றாள்.
|
|
|
(வி - ம்.) கனவு மூன்றுக்கும் தேன் முதலிய மூன்றும் உவமம் : ‘பிண்டி. . . . . வீழ்ந்தது‘ (சீவக. 223) என்னும் மொழி, இவன் கூறுதலின் இனிதாய்ப் பின் தீங்கு விளைத்தலின் தேனுவமம்; ‘ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும்‘ (குறுந். 354) என்றார் பிறரும். ‘எண், முத்தணி மாலை‘ (சீவக. 223) என்ற சொல் குலந்தூய்மை கூறுதலிற் பாலுவமம். இவன் (சீவகன்) ஆக்கத்திற்கு ஊறும் அமிர்து உவமம்; இவன் ஆக்கம் அமுதுபோல் உயிர்களைக் காத்தலின்.
|
( 193 ) |
| 223 |
தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண் |
| |
முத்தணி மாலை முடிக்கிட னாக |
| |
வொத்ததன் றாள்வழி யேமுளை யோங்குபு |
| |
வைத்தது போல வளர்ந்ததை யன்றே. |
|
|
(இ - ள்.) பிண்டிஅணி தொத்துஅறத் தொலைந்து வீழ்ந்தது - ஓர் அசோகு, தான் அணிந்த கொத்துக்கள் முற்றுங் கெட்டுப் பின்பு தானும் நேராக வீழ்ந்தது; அதன் தாள்வழியே முளைஒத்து - அதன் வழியிலே ஒரு முளை அதனை ஒத்து; எண் முத்து அணிமாலை முடிக்கு இடன்ஆக - எட்டு அழகிய முத்து மாலையை ஒத்த மாலைகளையுடைய ஒரு முடிக்கு இடம்ஆக; வைத்ததுபோல ஓங்குபு வளர்ந்தது - நட்டு வைத்தாற்போல ஓங்கி வளர்ந்தது (என்று விசயை கூறினாள்)
|
|
|
(வி - ம்.) முத்தணி மாலை - முத்தையொத்த மாலை; அணி; ‘மின்னணி நுண்ணிடை‘ (சிற். 342) என்றாற்போல் உவமவுருபு என்றது வெள்ளிய மாலையை. இது குலந்தூய்மை கூறிற்று; ‘வெண்டாமரை மலர்த் தடங்கள் போலு, நங்குடி‘ (சீவக. 547) என்பர்
|
|