பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1220 

   (வி - ம்.) யானை வீரரின் இயல் கூறியவாறு.

   குந்தம் - ஒரு படைக்கலன், அயில் - கூர்மை, சிலை - வில். இம்மூன்று படைகளாற் செய்யும் போரின்கட் குறைவிலார் என்க. அந்தரம் - வானம், ஆறா - வழியாக, சமம் - போர், கொந்தழலும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. கோடி - ஒரு கோடி பொன்.

( 55 )
2157 குங்கும நறுநீர் பந்திநின் றாடுங்
  குதிரையா றாயிரத் திரட்டி
பொங்குவெண் மயிர்சூழ் பொற்படை பொலிந்த
  வறுபதி னாயிரம் புரவி
வெங்கணை தவிர்ப்ப வெள்ளிவெண் படைய
  வாய்விடி னிலவரை நில்லாப்
பைங்கதிர்க் கொட்டைக் கவரிசூழ்ந் தணிந்த
  பகரினத் தொகையன பாய்மா.

   (இ - ள்.) பந்தி நின்று குங்கும நறுநீர் ஆடும் குதிரை ஆறாயிரத் திரட்டி - பந்தியில் நின்று நறிய குங்கும நீரை ஆடும் குதிரைகள் பன்னீராயிரம்; பொங்கு வெண்மயிர் சூழ் பொன்படை பொலிந்த அறுபதினாயிரம் புரவி - நெருங்கிய வெண்மயிர் சூழ்ந்தனவும் பொன்னாலாகிய கலனையுடையனவும் ஆகியவை அறுபதினாயிரம் குதிரைகள்; வெம் கணை தவிர்ப்ப - தம் மேல் இருந்து விடும் கணை பின்னிடச் செல்வனவும்; வெள்ளி வெண்படைய - வெள்ளியாலாகிய வெள்ளைக் கலனையுடையனவும்; வாய்விடின் நிலவரை நில்லா - வாயிலணிந்த கடிவாளத்தைத் தளர்த்தினாற் பறப்பனவும்; பைங்கதிர்க் கோட்டைக் கவரி சூழ்ந்து அணிந்த - புத்தொளி வீசும் குமிழையுடைய கவரியை நெற்றியில் அணிந்தனவும் ஆகிய ; பாய்மா பகரின் அத்தொகையான - குதிரைகளைக் கூறின் அறுபதினாயிரமே ஆகும்.

   (வி - ம்.) ஆகக் குதிரை நூறாயிரத்து முப்பத்தீராயிரம். ஆறாயிரத்தை இரட்டித்து அறுபதினாயிரத்தையும் இரட்டித்து ஒருங்கு கூட்டினால் நூறாயிரத்து முப்பத்தீராயிரம் வருவது காண்க. குங்குமங் கலந்த நீராடும் புரவிகளை நம்பிரான் என்பர். பந்தி - குதிரை கட்டுமிடம். படை - மேற்படுப்பது; இது குதிரையின் மேலிடும் தவிசுக்கு ஆயிற்று.

( 56 )
2158 வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூம்போன்
  மிடைந்தொளிர் குந்தமும் வாளுந்
தோநிலை யரவின் றோற்றமே போலுஞ்
  சிலைகளும் பிறகளுந் துறைபோ