பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1221 

2158 யூனமொன் றில்லா ருயர்குடிப் பிறந்தா
  ராயிர மடுகளங் கண்டார்
பானிலாப் பூணார் படைத்தொழிற் கலிமாப்
  பண்ணுறுத் தேறினா ரவரே.

   (இ - ள்.) வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூப்போல் - மூங்கிலின் இயல்புடைய கரும்பின் வெண்ணிறமாகிய பூவைப் போல்; மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும் - நெருங்கி ஒளிரும் குந்தமும் வாளும்; தோம்நிலை அரவின் தோற்றமே போலும் சிலைகளும் - குற்றம் பொருந்திய பாம்பின் தோற்றம் போன்ற விற்களும்; பிறகளும் - பிறபடைகளும்; துறைபோய் ஊனம் ஒன்று இல்லார் - முற்றக் கற்றுக் குற்றஞ் சிறிதும் இல்லாதவராய்; உயர்குடிப் பிறந்தார் - சிறந்த மரபிலே தோன்றியவராய்; ஆயிரம் அடுகளம் கண்டார் - ஆயிரம் போர்க்களம் பார்த்தவராய்; பால் நிலாப் பூணார் - பாலனைய வெள்ளொளி தவழும் அணிகளையுடையராய்; அவர் படைத் தொழில் கலிமாப் பண் உறுத்து ஏறினார் - உள்ள அவ்வீரர்கள் அக் குதிரைகளைப் பண்ணுறுத்தி ஏறினவர்.

   (வி - ம்.) குதிரை வீரர்களின் இயல் கூறியவாறு.

   வேய் - மூங்கில். வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப்பூ என்புழி வேய் பூவிற்குவமமாகாமையின், 'அடுக்கிய தோற்றம்' என்னும் குற்றமாகாமை உணர்க. தோம் - குற்றம், ஈண்டு வளைவு என்பதுபட நின்றது. உயர்குடி என்றது ஈண்டு உயர்ந்த மறக்குடி என்பதுபட நின்றது. ஆயிரம் அடுகளங் கண்டார் என்றது பயிற்சிமிகுதி குறித்து நின்றது. கலிமா - குதிரை.

( 57 )

வேறு

2159 தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசான்
மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த
பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்
குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய.

   (இ - ள்.) மாளவத் தகத்த - மாளவ நாட்டுக் குதிரைகள், தறுகண் ஆண்மைய - அஞ்சாத ஆண்மையுடையன; தாமரை நிறத்தன - தாமரை போலும் நிறமுடையன; தகைசால் மறு இல் வான் குளம்பு உடையன - தகுதி பொருந்திய குற்றம் அற்ற வெண்ணிறக் குளம்புடையன; குளிர்புனல் சிந்துவின் கரைய - குளிர்ந்த நீரையுடைய சிந்துவின் கரையில் வாழ்வனவாகிய குதிரைகள்; பறையின் ஆலுவ - பறையென முழங்குவன; படுசினை நாவலின் கனிபோல் குறைவு இல் கோலத்த - நாவலின் பழம் போலக் குற்றம் அற்ற கோலமுடையன.