| மண்மகள் இலம்பகம் |
1222 |
|
|
|
(வி - ம்.) தறுகண் - அஞ்சாமை. தகை - அழகுமாம். மறுவு - குற்றம். வான்குளம்பு - வெள்ளிய குளம்பு. ஆலுவ - முழங்குவன நாவற்கனி - கருநிறத்திற்குவமை. தாமரை நிறமும் வெண்குளம்புமுடைய மாளவநாட்டுக் குதிரைகளும், பறைபோல முழங்குவனவும் நாவற்கனி போலும் நிறமுடையனவுமாகிய சிந்துநாட்டுக்குதிரைகளும் என்றவாறு.
|
( 58 ) |
| 2160 |
பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த | |
வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த | |
பாரிற் றோ்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச் | |
சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம். | |
|
|
(இ - ள்.) பார சூரவம் பல்லவம் எனும் பதிப்பிறந்த துரகம் - பாரசூரவம் பல்லவம் என்னும் நகரங்களிலே பிறந்தனவாகிய குதிரைகள்; வீர ஆற்றல - வீரத்திற்குத் தக்க வலிமையுடையன; விளை கடுந் தேறலின் நிறத்த - விளையும் முதிர்ந்த கள்ளின் நிறமுடையன; பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்தென நாணி - நிலத்திலே தேர் சென்றாற் பழி மிகவும் உடையது என்று எண்ணி வெட்கி; சோரும் வார் புயல் துளங்க விண்புகுவன - நீரைச் சொரிகின்ற பெரிய முகில் அசைய வானிற் புகுவன.
|
|
(வி - ம்.) பாரசூரவம் - ஒரு நாடு. வீரம் ஆற்றுதலும் தேறல்நிறமும் உடைய பாரசூரவக் குதிரைகள் என்றவாறு. துரகம் - குதிரை.
|
( 59 ) |
| 2161 |
பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய | |
மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே | |
போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த | |
கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை. | |
|
|
(இ - ள்.) மாலை மாரட்டத்து அகத்தன - ஒழுங்கான மராட்டிரத்துள்ள குதிரைகள்; பீலி மாமயில் எருத்து எனப் பெருவனப்பு உடைய - தோகையையுடைய மயிலின் கழுத்துப் போலும் நிறமுடையன; பொருகடல் கலத்தின் வந்து இழிந்த குதிரை - கடலின் வழியே மரக் கலங்களில் வந்து இறங்கிய குதிரைகள்; வளர் இளங் கிளியே போலும் மேனிய - வளரும் இளங் கிளிகளின் நிறம்போலும் நிறமுடையன; கோலம் நீர்ப் பவளக் குளம்பு உடையன - அழகிய கடனீரிற்றோன்றும் பவளம் போலும் சிவந்த குளம்புகளை உடையன.
|
|
(வி - ம்.) மயிற் கழுத்துப்போலும் நிறமுடைய மராட்டநாட்டுக் குதிரைகளும் என்றவாறு. கிளிநிறமும் பவளக்குளம்பும் உடையன வாய்க் கலத்தில் வந்திழிந்த குதிரைகளும் என்றவாறு. மராட்டிரம் என்பது செய்யுள் நோக்கி மாரட்டம் என வேறுபட்டு நின்றது. மாரட்டம் + அத்து + அகத்தன எனப் பிரித்து மாரட்டத்தின் இடத்தன வெனக் கொள்க. அத்து, சாரியை.
|
( 60 ) |